Sivakarthikeyan: திட்டம் போட்டே சிவகார்த்திகேயன் பண்ண வேலை.. கங்குவாவுக்கு எதிரா திரும்பியிருச்சே!

by Rohini |
Sivakarthikeyan: திட்டம் போட்டே சிவகார்த்திகேயன் பண்ண வேலை.. கங்குவாவுக்கு எதிரா திரும்பியிருச்சே!
X

#image_title

Sivakarthikeyan: சூர்யாவின் நடிப்பில் 14ஆம் தேதி ரிலீசான திரைப்படம் கங்குவா. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் ஒரு பீரியட் படமாக வெளிவந்திருக்கின்றது

இந்த நிலையில் படத்தை பார்த்த அனைவரும் இதுவரை கலவையான விமர்சனங்களையே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கங்குவா படத்தைப் பற்றி ரசிகர்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை பற்றி கூறியிருக்கிறார். அதாவது 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 200 கோடியையாவது தாண்டுமா என்று தான் பல ரசிகர்கள் கூறி வருகிறார்களாம் .

இதையும் படிங்க:Kanguva: மனநலம் கருதி இப்படத்தை தவிர்ப்பது நல்லது?!… ஒரே போடா போட்ட பிரபல யூடியூபர்..!

இதற்கு முன் வெளிவந்த பீரியட் படங்களை இவர்கள் பார்த்ததே கிடையாதா? கதையை தேர்வு செய்வதில் சூர்யா சொதப்பிவிட்டாரா? இந்த படம் வெளியான பிறகு இனி அவர் அடுத்தடுத்து நடிக்கப் போகும் படத்தின் கதையும் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்த்தாலே பயமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறுவதாக செய்யார் பாலு கூறினார்.

இதில் மிகவும் வேதனை அளிக்கும் விஷயம் என்னவெனில் இந்தப் படம் 14ஆம் தேதி ரிலீசானது. அதற்கு முந்தைய நாள் அதாவது 13-ஆம் தேதி சிவகார்த்திகேயன் திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டார். அவருடைய மனைவி பிறந்தநாள் என்பதால் ஒரு சர்ப்ரைஸ் ஆன வீடியோவை வெளியிட்டார். அதில் அமரன் கெட்டப்பில் தன்னுடைய மனைவியை சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்பதற்காக சமையலறைக்குள் சென்று அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

அந்த வீடியோ வைரலாகி மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியது. இது அடுத்த நாளான நவம்பர் 14ஆம் தேதியும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனது. இதுவும் கங்குவா படத்தை பற்றி பெரிய அளவில் பேசாததற்கு ஒரு காரணம் என சூர்யா ரசிகர்கள் கூறுவது கேளிக்கையாகவும் இருக்கிறது. அதே சமயம் மிகவும் வேதனை அளிக்கிறது என செய்யாறு பாலு கூறினார்.

    kanguvakanguva in

இதையும் படிங்க: போர் அடிக்கிதா? ஓடிடியில் இந்த பிளிங்க் படத்தை பாருங்க… அசந்து போய்டுவீங்க!…

மேலும் தமிழ்நாட்டில் ஆயிரத்து நூறு திரையரங்குகள் இருக்க பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் அமரன் படத்தை எடுக்க மாட்டோம் என கூறினார்களாம் .எப்படியோ பேசி 700 தியேட்டர்கள் கங்குவா திரைப்படத்திற்காக ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள திரையரங்குகளில் இன்று வரை அமரன் திரைப்படம் தான் ஓடிக்கொண்டிருக்கின்றதாம்.

அந்த அளவுக்கு அமரன் திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்த்து இருக்கிறது. இதிலிருந்து பார்க்கும் பொழுது ஆடியன்ஸ்களை மிகவும் கவர்வது கண்டெண்டு மட்டும்தான் என செய்யார் பாலு கூறியிருக்கிறார்.

Next Story