வெற்றிமாறன் எழுதலை… சூரி பெயர் போடலை… என்னங்க குழப்புறீங்க… இயக்குனர் சொன்ன சீக்ரெட்…

Published On: May 30, 2024
| Posted By : Akhilan

Soori: காமெடி நடிகரான சூரி தற்போது கோலிவுட்டின் கலக்கல் ஹீரோவாக அவதாரம் எடுத்து இருக்கிறார். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அடுத்து ரிலீஸாக இருக்கும் கருடன் திரைப்படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சூரி பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியின் மூலம் பிரபலமானார். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. பல ஹீரோக்களுடன் காமெடி நடிகராக கலக்கியவர். கடந்த வருடம் விடுதலை படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்தார்.

இதையும் படிங்க: தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. கமல், சிம்பு சேர்ந்து செய்த அலப்பறை.. செம ட்ரீட் இருக்கு!..

முதல் ஹீரோ படம் என்றாலும் தனக்கு உரித்தான பாணியில் நடித்து அசரடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், கொட்டுக்காளி, ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் முக்கிய வேடம், கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் கருடன் திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் இப்படத்தில் சூரி நடித்து இருக்கிறார். இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இருவரின் நண்பராக சூரி நடித்து இருக்கிறார். இந்த கதையை வெற்றிமாறன் எழுதி இருந்ததாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: அட இந்த வாரம் ஜம்முனு என்ஜாய் பண்ணலாம் போலயே… ஓடிடியில் களைக்கட்டும் தமிழ் வெப்சீரிஸ்கள்…

படத்திற்கு புரோமோஷனாக அமையும் என்று வெற்றிமாறன் பெயரை போட்டு இருக்கிறோம். அவர் கதையில் சின்ன சின்ன அட்வைஸ் மட்டுமே சொன்னார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். அப்போ படம் வெற்றி பெற்றால் சூரியிடம் இருந்து இன்னும் நிறைய கதையை எதிர்பார்க்கலாமே எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.