கௌதம் கார்த்திக் - மஞ்சிமாவுக்கு நடந்தது இரண்டாது திருமணமா?.. வயித்துல புளியை கரைச்ச அந்த ஃபிளாஷ்பேக்!..

by Rohini |   ( Updated:2022-11-30 06:35:13  )
gautham_main_cine
X

gautham

நேற்று முன் தினம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது நடிகர் கௌதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் திருமணம். உற்றார் உறவினர்கள் முன்னிலையில் குறிப்பிட்ட சில நட்சத்திர பிரபலங்களை மட்டும் அழைத்து இவர்களது திருமணம் அரங்கேறியது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். அதே போல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் மஞ்சிமா மோகன் அறிமுகமானார்.

இதையும் படிங்க : மனசாட்சியே இல்லையா உங்களுக்கு… தமிழ் சினிமாவில் 2022ல் வெளிவந்த டாப் 5 மொக்கை படங்கள்..

gautham1_cine

gautham

இருவரும் 2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தில் ஒன்றாக நடித்தனர். இந்த படத்தை முத்தையா இயக்கினார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஆனால் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிப்படையாக கூறாமல் மறுத்து வந்தனர். அதன் பின்னர் தான் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. மேலும் திருமணத்திற்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இருவரும் அதிகாரப்பூர்வாக தங்கள் திருமண தேதியை தெரிவித்தனர்,

gautham2_cine

gautham manjima

மேலும் வரவேற்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துவிட்டனர். ஒரு நட்சத்திர காதல் ஜோடியின் திருமணம் இந்த அளவுக்கு எளிமையாக நடக்குமா? என்று ஆச்சரியத்தில் திகைத்து வைத்தனர்.

இதையும் படிங்க : சொத்துக்களை இழந்த சோகம்!…சினிமாவையே உலுக்கிய நடிகையின் மரணம்!..

இப்படி சிறப்பாக முடிந்த இவர்களது திருமணம் பற்றி சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இவர்களுக்கு நடந்தது இரண்டாவது திருமணம் என்று ரசிகர்கள் உட்பட இணையத்தில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

gautham3_cine

gautham

அதெப்படி இரண்டாவது திருமணம் என்று ஆராய்ந்து பார்த்தால் தேவராட்டம் படத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கும் மாதிரியான காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். அந்த படத்தின் திருமண புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் இது இவர்களுக்கு நடந்த இரண்டாவது திருமணம் என கமெண்டுகள் மூலம் கூறிவருகின்றனர்.

Next Story