சிம்பு படம் அவ்வளவுதான்… ஆந்திராவுக்கு டிக்கெட் போட்ட கௌதம் மேனன்… அப்போ அந்த கமல் படம்??
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட இத்திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசனுக்கு விலை உயர்ந்த காரையும், கௌதம் மேனனுக்கு ஒரு பைக்கையும் பரிசாக வழங்கினார்.
“வெந்து தணிந்தது காடு” இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் கூறப்பட்டது. அதே போல் கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன “வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தில் இரண்டாம் பாகமும் தயாராகி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.
இந்த நிலையில் “வெந்து தணிந்தது காடு 2”, “வேட்டையாடு விளையாடு 2” என இந்த இரண்டு திரைப்படங்களின் அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அத்திரைப்படத்தில் ராம் பொத்தினேனி நடிக்க உள்ளாராம். ராம் பொத்தினேனி “வாரியர்” திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியவர். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
ரசிகர்கள் “வெந்து தணிந்தது காடு 2”, “வேட்டையாடு விளையாடு 2” ஆகிய திரைப்படங்களின் அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும்போது திடீரென கௌதம் மேனன் தெலுங்கில் படம் இயக்கப்போகிறார் என்று வெளிவந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி அந்த தெலுங்கு எப்போது தொடங்கும்? “வெந்து தணிந்தது காடு 2” பணிகள் என்னவாகும்? “வேட்டையாடு விளையாடு 2” குறித்த தகவல்கள் வருமா? என்பதெல்லாம் அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.