சர்ச்சை இயக்குனரின் மூக்கை உடைத்த கௌதம் வாசுதேவ் மேனன்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க?
Gautham Vasudev Menon: தமிழ் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கமே வித்தியாசமாக இருக்கும். காதலை மென்மையாக சொல்லி காதலியை அழகாக வர்ணிக்கும் டெக்னிக்கை தன்னுடைய எல்லா படத்திலும் கையாண்டிருப்பார். அவரே இந்த இயக்குனரை பார்த்து சொல்லி இருக்கும் ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமா வரலாற்றில் வித்தியாசமாக அல்பா மேல் என்ற மையத்தினை வைத்து படமாக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. அவரின் முதல் திரைப்படமான அர்ஜூன் ரெட்டி மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து சந்தீப் பிரபல இயக்குனரானார். இதையடுத்து அவரின் இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது.
இதையும் படிங்க: முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வந்து என்கிட்ட பேசு!.. பிரபல நடிகையை விரட்டிய விஜயகாந்த்…
இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் பலரும் இப்படத்தினை விமர்சித்தனர். அல்பா மேல் இந்திய சினிமாவுக்கு ஒத்துவரவில்லை என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. இந்த கதையமைப்பில் இருந்து மாறுப்பட்டவர் கௌதம் வாசுதேவ் மேனன்.
அவரின் இயக்கமே பெண்களை மதித்து காதலை போதிப்பது போல அமைந்து இருக்கும். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், அனிமல் படம் குறித்து கேட்ட போது, எனக்கு அல்பா மேல் கதைகளில் நம்பிக்கை இல்லை. ரன்பீர் கபூர் நடிப்பு நன்றாக தான் இருந்தது. ஆனால் படத்தை முழுமையாக ஒரே நேரத்தில் பார்க்க முடியவில்லை.
இதையும் படிங்க: அஜித் ஃபேனா இருந்து சொல்றேன்.. விஜய்தான் அந்த விஷயத்துல பெஸ்ட்! சீக்ரெட்டை உடைத்த சக்திவாசு
முதல் பாதியை பார்த்து சில நாள் கழித்து இரண்டாம் பாதியை பார்த்தேன். இதை சொல்வதனால் சந்தித்தேன் என்னை யார் நீங்கள் பெரிய ஆளா என கேட்க கூட வாய்ப்பு இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் குறிப்பிட்டிருப்பார். தற்போது சந்தீப் கொடுத்திருக்கும் பேட்டியில் இதற்கு நேராக பேசி இருக்கிறார்.
எனக்கு கௌதம் வாசுதேவ் மேனனை பிடிக்கும். அவரின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை நான் பார்த்து இருக்கேன். அவரின் எல்லா படங்களும் பிடிக்கும் என குறிப்பிட்டிருக்கிறார். பரவாயில்லையே சந்தீப்பிற்கு நல்ல மனது என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.