அஜித் ஃபேனா இருந்து சொல்றேன்.. விஜய்தான் அந்த விஷயத்துல பெஸ்ட்! சீக்ரெட்டை உடைத்த சக்திவாசு
Ajith Vijay: சினிமாவில் இரு சாம்ராஜ்யங்கள் என்று சொல்லலாம். ரஜினி - கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ஆதிக்கம் கொண்ட நடிகர்களாக இவர்கள் இருவரும் தான் இருந்து வருகிறார்கள். எம்ஜிஆர் - சிவாஜியை போல ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் ஒன்றாக நடித்தார்கள். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள்.
அப்போது இருந்தே இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்து இப்போது வரைக்கும் அந்த நட்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்றைய சூழலில் பெரும் ரசிகர் படைபலத்துடன் இருவர் படங்களும் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸாகின்றன. கடைசியாக துணிவு மற்றும் வாரிசு போன்ற படங்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் ரிலீஸானது.
இதையும் படிங்க: கர்ப்பமா இருந்தத மறச்சிட்டேன்!… ரஜினி பதறிட்டாரு!.. கவர்ச்சி நடிகை சொல்றத கேளுங்க!…
அடுத்ததாக கோட் மற்றும் விடாமுயற்சியை எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் பிரபல இயக்குனரான பி.வாசுவின் மகனும் நடிகருமான சக்தி விஜய் அஜித் இருவரை பற்றியும் ஒரு பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். சக்தி தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தை முதன் முதலில் வந்து பார்த்தவர் ரஜினிதானாம்.
அதே போல் அந்தப் படத்தில் அமைந்த ‘அரபு நாடே’ என்ற பாடலை முதன் முதலில் பார்த்தவர் அஜித்தானாம். அந்தப் பாடலை பார்த்த பிறகு சக்தியிடம் அஜித் ‘என்னடா முதல் படத்திலேயே பேய் மாதிரி நடிச்சிருக்க? யாரு மாஸ்டர்’ என்றெல்லாம் விசாரித்து கட்டிப்பிடித்தாராம். இதற்கிடையில் அஜித்தின் தீவிர ரசிகர் சக்தியாம். விஜய்க்கும் அஜித்துக்கும் இருக்கும் வித்தியாசமே அஜித் புயலாக வருவார். தென்றலாய் பேசுவார். ஆனால் விஜய் தென்றலாய் வருவார் என விஜயின் சாதுவான குணத்தை பற்றி கூறினார்.
இதையும் படிங்க: அம்மா-கணவன் லிப்கிஸ் சர்ச்சைக்கு இந்திரஜா கொடுத்த பதில்… அவங்களும் பாதிக்கப்பட்டு இருக்காங்களே!..
ஆனால் நான் அஜித் ரசிகனாக இருந்தாலும் அஜித்தை விட மற்ற நடிகர்களுக்கு விஜய் நிறைய முறை உதவி செய்திருக்கிறார் என மற்ற நடிகர்களின் பட ரிலீஸ் பிரச்சினையில் விஜய் தலையிட்டு அந்த பிரச்சினையை முடித்த விஷயத்தை பற்றி பகிர்ந்திருந்தார். உதாரணமாக சிம்புவின் வாலு பட பிரச்சினையையும் விஜய்தான் முடித்துவைத்தார் என்பதை கூறினார்.