19 வயதில் கல்யாணம்!. டாக்டராக ஆசைப்பட்ட ஜெமினி கணேசன்!. சினிமாவுக்கு வந்தது இப்படித்தான்!..

Gemini ganesan: 60களில் தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். அவருக்கு ஏன் அந்த பெயர் வந்தது எனில் பெரும்பாலும் காதல் கதைகளில் மட்டுமே நடித்த நடிகர் இவர். ஈகோ இல்லாத நடிகர் இவர். அதனால்தான் சிவாஜியுடன் பாச மலர் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி என எல்லோருடனும் நட்பாக பழகிய நடிகர் இவர். 60களில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நம்பர் ஒன், நம்பர் 2 என இருந்தபோது 3வது இடத்தில் இருந்தவர் ஜெமினி கணேசன். இவருக்கு பெண் ரசிகைகளும் பலர் இருந்தனர். எனவே, நிஜ வாழ்விலும் காதல் மன்னனாகவே இருந்தார் ஜெமினி கணேசன்.

இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?

சினிமாவுக்கு வருவதற்கு இவரின் பெயர் ராமசாமி கணேசன். இவரின் தாத்தா நாராயணசாமி அந்த காலத்திலேயே புதுக்கோட்டை மகாராஜா கல்லூரிக்கு பிரின்சிபிளாக இருந்தவர். அவரின் மகன் ராமசாமிக்கு பிறந்தவர்தான் கணேசன். பள்ளியில் படிக்கும்போதே தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுதான் கணேசனின் ஆசையாக இருந்தது.

ஆனால், அவரால் அது முடியவில்லை. அப்போதுதான் ‘என் மகளை திருமணம் செய்து கொண்டால் உன்னை டாக்டர் ஆக்குகிறேன்’ என ஒருவர் சொன்னதால் அவரின் மகள் அலமேலுவை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவரின் வயது 19. அவரின் மனைவி அலமேலுவின் வயது 14. ஆனாலும், கணேசனின் கனவு நினைவாகவில்லை. ஏனெனில், திருமணமாகி ஒரு மாதத்திலேயே அவரின் மாமனார் இறந்துவிட்டார்.

இதையும் படிங்க: நீங்க பேசுனா நான் வாசிக்க மாட்டேன்! கலைஞரையே எதிர்த்த பிரபலம் – ஜெமினி வீட்டில் நடந்த உச்சக்கட்டம்

உடனே எதாவது வேலையில் சேரவேண்டிய நிலையில் இருந்த கணேசன் விமானத்தில் பைலைட்டாக ஆசைப்பட்டார். அதற்காக டெல்லிக்கு இண்டர்வ்யூ சென்றபோது அவரின் உறவினர் நாராயணசாமி என்பவர் ‘நீ பேராசிரியர் ஆகிவிடு’ என சொல்ல மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார் கணேசன்.

அதன்பின் அந்தவேலையை விட்டுவிட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த ஜெமினி நிறுவனத்தில் சேர்ந்து சில வருடங்கள் வேலை செய்தார். ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பொருத்தமான நடிகர், நடிகைகளை இண்டர்வ்யூ செய்து சேர்ந்தெடுப்பதுதான் அவரின் வேலை.

gemini

gemini

அதன்பின்னர்தான் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஜெமினி நிறுவனத்தில் வேலை செய்ததால் அவரின் பெயருக்கு முன்னால் ஜெமினி சேர்ந்துகொண்டது. அதன்பின் அதுவே அவரின் அடையாளமாக மாறிவிட்டது. மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையை நிறைவேறாமல் போனாலும் தனது மகள்கள் பலரையும் அவர் மருத்துவராக்கி அழகு பார்த்தார். இதில் முக்கியமானவர் கமலா செல்வராஜ் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: பாலச்சந்தரையே ரிஜெக்ட் பண்ண ஜெமினி கணேசன்!.. அப்புறம் நடந்ததுதான் பெரிய டிவிஸ்ட்!..

 

Related Articles

Next Story