படத்தைப் பார்த்த உடனே இது ஹிட் சார்... என்று சொன்ன சூப்பர்ஸ்டார்...படமோ தாறுமாறு ஹிட்...!

by sankaran v |
படத்தைப் பார்த்த உடனே இது ஹிட் சார்... என்று சொன்ன சூப்பர்ஸ்டார்...படமோ தாறுமாறு ஹிட்...!
X

Gemini

ஓ ...போடு என்ற பாடலைக் கேட்ட உடனே நம் நினைவுக்கு வரும் படம் ஜெமினி தான். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. உப்பு புளி காரத்தை சரியான விகிதத்தில் கலந்து மசாலாவாக ரசிகர்களுக்கு ருசிக்க ருசிக்க தந்துள்ளார் இயக்குனர் சரண்.

படத்தின் நாயகியாக கிரண் அறிமுகம். செம லுக். இப்படி ஒரு கவர்ச்சி ஹீரோயினைத் தானே தமிழ் ரசிகர்கள் இத்தனை நாள்களாக எதிர்பார்த்து இருந்தார்கள் என்ற ஆசை பெரும்பாலான ரசிகர்களுக்கு நிறைவேறியது.

படம் செம விறுவிறுப்பு. ராயல் லுக். படத்தின் வில்லனோ இப்படி இதற்கு முன் தமிழ்சினிமா பார்த்திருக்க முடியாது. அவ்வளவு சுவாரசியமான நடிப்பும், நகைச்சுவையும் கலந்த வில்லன். மிமிக்ரி செய்து பைட் பண்ணும் நக்கல் வில்லன் இவர் தான் என்றால் மிகையில்லை.

ஹீரோவைக் காட்டிலும் படத்தில் வில்லனே மிகவும் நம்மை ரசிக்க வைத்து இருந்தார். அது சரி...இப்பேர்ப்பட்ட வில்லனை அந்தப் படத்தில் நடிக்க சிபாரிசு செய்தவர் யார் என்று தெரியுமா? பார்க்கலாம்...வாங்க..!

ஏவிஎம் பட அதிபர் சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின் 2002ல் வெள்ளித்திரைக்காக எடுத்த படம் ஜெமினி. இதன் அனுபவங்களை அவர் வாயாலேயே சொல்லக் கேட்போம்.

gemini2

மின்சாரக்கனவு படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நாங்கள் வெள்ளித்திரை பக்கமே வரவில்லை. டிவி நிகழ்ச்சிகளிலேயே கவனம் செலுத்திக் கொண்டு இருந்தோம்.

குழந்தைகளுக்குப் பிடித்த ஓ...போடு..!

AVM Gemini

2002ல் ஜெமினி படம் எடுத்தோம். இதில் இடம்பெற்ற ஓ போடு பாடல் உருவான விதம் சுவாரசியமானது. இந்த ஐடியாவைக் கொடுத்தவர் இயக்குனர் சரண். மகிழ்ச்சியான தருணங்களில் ஓ போடு என்று சொல்வார்களாம்.

அதையே பாட்டில் வைத்தால் என்ன என்று அவருக்குத் தோன்ற அப்படித்தான் அந்தப் பாடல் இடம்பிடித்தது. படம் வெளியானதும் அந்தப் பாடலைப் பாடாத குழந்தைகளே இல்லை.

மிமிக்ரி வில்லன்

விக்ரம் ரொம்பவே ஜாலியாக நடித்திருந்தார். கலாபவன் மணியை அவர் தான் எங்களுக்கு சிபாரிசு செய்தார்.

காசி மலையாளப் படத்தில் கலாபவன் மணி நன்றாகச் செய்திருந்தார் என்றார். ஜெமினியில் தனது மிமிக்ரி திறமைகளை வெளிப்படுத்தும் சூப்பரான ரோல் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கிற்கு வந்தனர். நல்ல லாபம் கிடைத்தது. விநியோகஸ்தர்கள் மகிழந்தனர். அதை விட வேறு என்ன மகிழ்ச்சி எங்களுக்கு இருக்க முடியும்?

ஆரூடம் சொன்ன ரஜினி

rajni

ஜெமினி படம் முடிந்ததும் அதில் கிரண் நடித்த தீவானா பாடலை ரஜினிகாந்த் பார்க்க விரும்பினார். தன் படம் ஒன்றுக்கு கிரணை ஒப்பந்தம் செய்ய எண்ணி அதற்கு முன் அவரது நடிப்பையும், எக்ஸ்பிரஷனையும் பார்க்க விரும்பினார்.

படம் முழுவதையும் அவருக்குப் போட்டுக் காட்டினோம். ஓ போடு பாடல் காட்சியைப் பார்த்ததுமே என் கையைப் பற்றிக் குலுக்கி படம் ஹிட் சார் என்றார்.

அது எப்படி சொல்றீங்கன்னு கேட்டோம்.

எனக்கு அந்த ஃபீல் வந்தது. அதனால் தான் என்னால் நிச்சயமாக ஹிட் என்று சொல்ல முடிந்தது என்றார் சூப்பர்ஸ்டார்.

Next Story