நடிகர் அஜித்தும், விஜயும் 30 வருடங்களுக்கு மேல் திரையுலகில் போட்டி நடிகர்களாக வலம் வந்தவர்கள். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து அதன் பின் ஆக்சன் ரூட்டுக்கு மாறி அதன்பின் மாஸ் ஹீரோக்களாக மாறியவர்கள். அஜித்தின் விஜயும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில்முறை போட்டியாளராகவே கருதப்பட்டார்கள். ஒருபக்கம் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் தொடர்ந்து சண்டை போட்டு வருவதும் பல வருடமாகவே நடந்து வருகிறது.
விஜய் தற்போது அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இனிமேல் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் அவர் இனிமேல் அதிக படங்களில் நடிப்பாரா என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே விஜய் மற்றும் அஜித்தின் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. ஏற்கனவே விஜயின் கில்லி, குஷி, சச்சின் உள்ளிட்ட சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது..
அதேபோல் அஜித்தின் மங்காத்தா உள்ளிட்ட சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வருகிற 20-ம் தேதி ரிலீஸாகிறது. அதேநாளில் விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.
கில்லி படம் முதல் முறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது 20 கோடி வரை வசூல் செய்தது. இந்த முறை அஜித் படத்துடன் மோதுவதால் இந்த படம் என்ன வசூல் செய்யப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…