கில்லி படம் விஜய்க்கு ரெடி செய்தது இல்லையாம்… அந்த நடிகர் நடிக்க வேண்டியது மிஸ் ஆகிட்டதாம்…
Ghilli: கோலிவுட்டில் மட்டுமல்லாது விஜயின் கேரியரிலும் மிக முக்கிய திரைப்படமாக இருந்தது கில்லி தான். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லையாம். வேறு ஒரு நட்சத்திர ஜோடியை போட எண்ணி தரணி முயற்சி செய்து நடக்காமல் போன சம்பவமும் நடந்ததாம்.
மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ஒக்கடு. இப்படத்தில் பூமிகா அவருக்கு ஜோடியாக நடித்து இருப்பார். படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி விட்டது. இதனால் அதை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்தது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாக இருந்த இப்படத்தினை தரணி இயக்குவதாக முடிவானது.
இதையும் படிங்க: பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கேரக்டர் நான் தான் செஞ்சிருக்கணும்… ஆனா.. ரகசியம் சொன்ன வாரிசு நடிகை…
விஜயின் மாஸ் ஹிட்டான திரைப்படம் என்றாலும் முதலில் இப்படத்துக்கு முடிவானவர் விக்ரம் தான். ஏனெனில் அந்த சமயத்தில் ஹிட் படங்களை கொடுத்து முன்னணியில் இருந்தார். தூள் படம் மாஸ் வசூலை குவித்து இருந்தது. இதனால் அதே ஜோடியை கில்லியில் நடிக்க வைக்க முடிவெடுக்கிறார்.
ஹீரோவாக விக்ரம், ஹீரோயினாக ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்து அவர்களிடம் பேச்சு வார்த்தையில் இறங்கினாராம். ஆனால் அதற்கு முன்னரே இருவரும் ஜோடியாக அருள் படத்தில் கமிட்டாகி விட்டனர். அதே ஜோடி இதில் நடித்தால் நன்றாக இருக்காது என்றது தயாரிப்பு தரப்பு.
இதையும் படிங்க: இப்போதான் இது மணிரத்னம் படம்! சிம்புவை தொடர்ந்து ‘தக் லைஃபில்’ இணைந்த ஹேண்ட்ஸமான அந்த ஹீரோ
அதே நேரத்தில் அவர்கள் கால்ஷூட் பிரச்னையும் சேர்ந்து வர அவர்களை விடுத்து விஜய் மற்றும் திரிஷாவை இப்படத்தில் நடிக்க வைத்தாராம் தரணி. ஏற்கனவே தூள் படத்தின் கதையை சொன்ன போது அதை விஜய் தரப்பு நிராகரித்ததாம். ஆனால் படம் மாஸ் ஹிட். இதையடுத்து கில்லி படத்துடன் அவர் வர உடனே ஓகே செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.