More
Categories: Cinema History Cinema News latest news

கமலின் அந்த ஹிட் பாட்டு தான் கில்லி ஷா லா லா… உண்மையை சொன்ன கபிலன்!…

Ghilli: விஜய் நடிப்பில் மெகா ஹிட் திரைப்படமான கில்லி ரீ-ரிலீஸில் மீண்டும் உச்சம் பெற்று இருக்கும் நிலையில், அப்படத்தின் பாடல் உருவாக்கிய விதம் குறித்து பாடலாசிரியர் கபிலன் தெரிவித்து இருக்கிறார்.

தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான படம் கில்லி. இது விஜயின் கேரியரில் மட்டுமில்லாமல் த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் கேரியரையும் மிகப்பெரிய அளவில் உயர்த்தியது என்றே சொல்லலாம். படம் பெரிய அளவில் வசூல் குவித்திருந்தது.

இதையும் படிங்க: நிஜ முத்துப்பாண்டியாவே மாறிய பிரகாஷ்ராஜ்! ‘கில்லி’ படத்தில் இயக்குனரை மிரட்டிய சம்பவம்

சமீபகாலமாக தியேட்டர்கள் வெற்றி படங்களை ரீ ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப கில்லி படமும் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆச்சரியப்படும் வகையில் முதல் நாளை இப்படத்திற்கு 4 கோடி அளவு வசூல் குவிந்தது. இதனால் கில்லி படக்குழு மீண்டும் வைரலாகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் கபிலன் சில ஆச்சரிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, பொதுவாக ஹீரோயின்களுக்கான இன்ட்ரோ பாடல் பெரிய அளவில் கொடுக்காது. அந்த சமயத்தில் ஜோதிகாவின் மேகம் கருக்குது பாடல் தான் ஓரளவு வெற்றி பெற்றிருந்தது.

இதையும் படிங்க: கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…

அந்த நேரத்தில் தான் திரிஷாவுக்கு இந்த பாடலை தரணி எழுத சொன்னார். அப்பாட்டினை செந்தூரப் பூவே பாட்டில் வரும் என் மன்னன் எங்கே, என் மன்னன் எங்கே பாடலை போல இருக்க வேண்டும் என்றார். ஆனால் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக வேண்டும் எனக் கூறினார். 

அதே மாதிரி, அப்படிப் போடு பாடலில் முதல் வரியாக இந்த நடை போதுமா… இன்னும் கொஞ்சம் வேணுமா என்று தான் எழுதி இருந்தேன். இது கடைசியில் தான் வரும். முதலில் வரும் மாதிரி வார்த்தையை கேட்டார் தரணி. அப்போ தான் அப்படிப்போடு வரியை எழுதினேன். இந்தப் பாட்டுக்கு முதலில் சரணம் பண்ணிட்டு பின்னர் பல்லவி எழுதினோம். ரிவர்ஸில் செஞ்ச பாட்டு இதுதான் எனவும் குறிப்பிட்டார்.

Published by
Akhilan

Recent Posts