தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே உலக அளவில் 10.5 கோடி வசூலை கில்லி படம் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் மட்டும் கில்லி படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கில்லி படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கல்கி படத்துல அமிதாப் பச்சனுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?.. பேர கேட்டாலே சும்மா பூமி அதிருதே!..
ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழ்நாட்டில் கில்லி படத்தின் வசூல் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி இருப்பதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக 17 முதல் 18 கோடி ரூபாய் வசூலை கில்லி படம் முதல் இரண்டு நாட்களில் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் மொய்தின் பாயாக நடித்த லால் சலாம் திரைப்படம் அதிகபட்சமாக பதினாறு கோடி ரூபாய் வசூல் மட்டுமே அள்ளியதால் தகவல்கள் வெளியான நிலையில், அந்த வசூலை இரண்டு நாட்களில் கில்லி ரிலீஸ் திரைப்படம் முறியடித்துள்ளது என விஜய் ரசிகர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தலைவர் 171 டைட்டிலே இப்படின்னா படம் எப்படி இருக்கும்?.. மெகா அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..
லால் சலாம் திரைப்படம் ரஜினிகாந்த் படமே இல்லை என்றும் மகளுக்காக அவர் நடித்துக் கொடுத்த கடந்தான் என்றும் வேட்டையன் மற்றும் தலைவர் 171 வது படம் வெளியாகும் போது அந்த வசூலை எல்லாம் தளபதி 69-வது படம் வெளியானாலும் முறியடிக்க வாய்ப்பே இல்லை என சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…