latest news
Kanguva: லக்கி பாஸ்கர் டீம்கிட்ட ஞானவேல் ராஜா கத்துக்கணும்!.. கொஞ்சமா பேசினாரு!…
Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்காக கங்குவா டீம் கடந்த 2 வருடங்களாக கடுமையான உழைப்பை போட்டிருந்தது. சூர்யாவின் நடிப்பு, உழைப்பு, ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன், விஸ்வல் எஃபெக்ட்ஸ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் சிறப்பாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் படத்தின் கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்கிறார்கள் பலர்.
எனவே, எதிர்பார்ப்போடும், எதிர்பார்ப்பு இல்லாமலும் கூட கங்குவா பார்க்க தியேட்டருக்கு போன ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். ஏனெனில், ரசிகர்களை கவரும் கதை மற்றும் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் சிறுத்தை சிவா. படத்தில் வரும் பல காட்சிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதவை.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்துக்காக சுடப்பட்ட மொத்த வடைகள்!.. இப்படி போட்டு பொளக்குறாரே மாறன்
இப்படித்தான் படத்தின் 90 சதவீத காட்சிகள் வருகிறது. அதோடு, படம் முழுக்க எல்லோரும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதோடு சேர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் காதை கிழிக்கிறது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுத்திருக்கிறது. மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
பல மொழிகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒவர் பில்டப் கொடுத்தார் ஞானவேல் ராஜா. தமிழில் இதுதான் முதல் ஃபேன் இண்டியா படம், படத்தின் நீளத்தில் இரண்டே கால் மணி நேரம் கூஸ்பம்ஸாக இருக்கும். படம் 2 ஆயிரம் கோடியை வசூலிக்கும்.
பாகுபலி வசூலை தாண்டும்.. கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் சினிமா என அவர் என்னென்னவோ பேசினார். அதோடு, வாயை பிளந்து கொண்டு படம் பார்ப்பார்கள் என சூர்யா சொல்லி இருந்தார். தற்போது அது எல்லாவற்றையும் வைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
துல்கர் சல்மான் நடிப்பில் 25 கோடி செலவு செய்து லக்கி பாஸ்கர் என்கிற படத்தை எடுத்து தேவையான புரமோஷனை மட்டும் செய்து 100 கோடி அள்ளியிருக்கிறார்கள். ஆனால், அதிக பட்ஜெட்டில் ஓவர் பில்டப் செய்து வெளிவந்துள்ள கங்குவா வசூலில் எதிர்பார்த்த வசூலை பெறாது என்றே கணிக்கப்படுகிறது. இந்நிலையில், லக்கி பாஸ்கர் டீமிடம் ஞானவேல் ராஜா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.