விஜய்க்கு ரீல் மகளா நடிச்சிட்டு சான்ஸ் இல்லாம சுத்துறாரே!.. அபியுக்தா இப்போ எப்படி இருக்காரு பாருங்க?

by Saranya M |
விஜய்
X

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடிகை அபியுக்தா மணிகண்டன் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் கட்சியில் உன்னுடைய ஃபேவரைட் நடிகர் யார் என கேட்டது தல என அபியுக்தா சொல்ல மகன் விஜய்யை அப்பா விஜய் போட்டுத் தள்ளுவது போல கோட் படத்தின் கிளைமாக்ஸ் உருவாக்கி இருப்பார்கள்.

விஜயின் கோட் படத்தை இயக்கிய பிறகு அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் வெங்கட் பிரபுவே தத்தளித்து வரும் நிலையில், அந்த படத்தில் விஜய்க்கு ரீல் மகளாக நடித்த அபியுக்தாவுக்கும் இதுவரை எந்த ஒரு புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை எனக்கூறுகின்றனர்.

இந்நிலையில், வழக்கமாக இளம் நடிகைகள் புதிய பட வாய்ப்புகளை தேடிப் பிடிப்பதற்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை போலவே அபியுக்தாவும் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகளான இவருக்கு மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் இருந்த நிலையில், கோட் படத்தில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. விஜய் மற்றும் சினேகாவுக்கு மகளாக நடித்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் ஒரே படத்தின் மூலம் பிரபலமானார்.

ஆனால், அந்த பிரபலத்தை வைத்துக் கொண்டு அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தான் வருத்தமான விஷயமாக உள்ளது என்கின்றனர். தனது தோழி மீனாட்சி சவுத்ரி மரணம் அடைந்த பிறகு எப்படி ஐபிஎல் மேட்ச் பார்க்க இவருக்கு மனசு வந்தது என ஏகப்பட்ட மீம்கள் போட்டு இவரை ரோஸ்ட் செய்தனர்.

கடற்கரையில் அந்தி சாயும் பொழுதில் பிரவுன் கலர் உடையை அணிந்துக் கொண்டு இளைஞர்களை மயக்கும் அளவுக்கு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Next Story