கோட் ஹிட்டடிக்கும்.. மத்தவங்களுக்குதான் அனிருத் வேணும்.. ரஜினியை சொல்றாரா இவரு?!..

by Akhilan |   ( Updated:2024-08-31 13:43:02  )
கோட் ஹிட்டடிக்கும்.. மத்தவங்களுக்குதான் அனிருத் வேணும்.. ரஜினியை சொல்றாரா இவரு?!..
X

#image_title

Anirudh: தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் காலம் தான் என்றாலும் அவர் இல்லாமல் கோட் உருவாகி இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமான விஷயமாக தான் இருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சிவா தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் தற்போது அனிருத்தின் ஆட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது. முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், கமல், அஜித் என எல்லோருக்கும் அனிருத் இசை தான் உச்சபட்சமாக இருக்கிறது. இதில் ரஜினிகாந்தின் ஜெயிலர் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க: குறி வச்சாச்சு இரை ரெடியா? வேட்டையன் ரஜினிகாந்தின் முக்கிய அப்டேட்டுங்கோ!..

அப்படத்தின் வெற்றி விழாவில் கூட அனிருத்தின் மியூசிக்கை தூக்கி விட்டால் படம் சாதாரணமாகிவிடும் எனக் கூறியிருப்பார். கிட்டத்தட்ட படத்தின் மொத்த பாரத்தையும் தூக்கி சுமந்த முக்கியமான இடத்தில் அனிருத் இருந்தார். அதேபோல லியோ திரைப்படத்தில் அனிருத்தின் மியூசிக் பங்கு மிகப் பெரியதாக அமைந்தது.

Jailer

தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படமான வேட்டையன், அதற்கடுத்த படமான கூலி ஆகியவற்றில் அனிருத்தையே இசையமைக்க வைத்து இருக்கிறார். ஆனால் விஜயின் விரைவில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்சேதுபதி நடித்த படத்தில் முதலில் டிக் ஆனவர் அஜித்தா? இயக்குனரே சொன்ன சீக்ரெட்

ஆனால் விஜய்யின் கோட் திரைப்படத்தில் அதெல்லாம் தேவையில்லை. திரை கதையே நின்னு பேசும். இதில் அனைவரின் உழைப்பும் இருக்கிறது. அதுவே படத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக அமையும் என குறிப்பிட்டு இருக்கிறார். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் ரஜினி தாக்கப்பட்டாரா என கலாய்த்து வருகின்றனர்.

வீடியோவைக் காண: https://x.com/VCDtweets/status/1829547860389720338

Next Story