கோட் படத்துக்கு சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா? பிசினஸ்ல மிஞ்சிய லியோ
விஜய்க்கு 200 கோடி சம்பளம் உண்மையா என்ற தகவல் திரையுலகில் வலம் வருகிறது. இதற்கு பிரபல வலைப்பேச்சு பிஸ்மி என்ன சொல்றாருன்னு பாருங்க.
செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகிறது. இதன் பிசினஸ் ரிப்போர்ட்டைப் பார்ப்போமா..
படத்தின் ஹீரோ விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம். லியோ படத்தில் 125 கோடின்னு சொல்லப்பட்டது. அதற்கு அடுத்தப் படமான கோட் படத்திற்கு ஏஜிஎஸ் போன்ற முன்னணி பட நிறுவனம் 75 கோடியை அதிகமாகக் கொடுத்து இருக்க முடியும் என்று சொல்கிறார்கள். ஒரு சிலர் 150 கோடி தான் என்கிறார்கள்.
ஆனால் பெரும்பான்மையானவர்கள் 200 கோடி தான் என்கிறார்கள். ஏன் எனில் இந்த புராஜெக்ட் குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் விஜயிடம் பேசியபோது விஜய் ஏதோ ஒரு லாபத்தில் ஷேர் கேட்டதாகவும், அதைத் தவிர்க்க ஏஜிஎஸ் நிறுவனம் 200 கோடி தர ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த அடிப்படையில் தான் விஜய்க்கு 200 கோடியாம். வெங்கட்பிரபுவுக்கு 8 கோடி, பிரசாந்த்துக்கு 5 கோடி, பிரபுதேவாவுக்கு 4 கோடி, மோகனுக்கு 2 கோடி, மீனாட்சி சௌத்ரிக்கு 40 லட்சம் எனவும் சம்பளம் பேசப்பட்டதாம். சிநேகாவுக்கு 75 லட்சம். யுவன் சங்கர் ராஜாவுக்கு 2 கோடி. மற்ற நடிகர்களுக்கு 5 கோடி.
மற்ற டெக்னீசியன்களுக்கு 7 கோடி. மொத்த சம்பளம் 234.15 கோடி. இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட 125 நாள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதற்கு மட்டுமே 54 கோடி. சிஜி செலவு 12 கோடி செட்களுக்கு 10 கோடி, வெளிநாட்டு ஷெடுல் 20 கோடி, ப்ரீ மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் 3 கோடி. ஆக மொத்தம் தயாரிப்பு செலவுக்கு 99 கோடி.
மொத்த செலவு 333.15 கோடி. இதுதான் கோட் படத்தின் பட்ஜெட். இந்தப் படத்தை இவ்வளவு செலவு செய்து எடுத்த தயாரிப்பாளருக்கு என்ன லாபம்னு பார்க்கலாம். தமிழக திரையரங்குகள் மினிமம் கேரண்டிக்கு 76 கோடி, இதே போல கேரளாவுக்கு 16 கோடி, கர்நாடகாவுக்கு 13 கோடி, ஆந்திரா, தெலங்கானாவுக்கு 15 கோடி வரை போயுள்ளது.
இந்தி மற்றும் வட இந்திய திரையரங்குகளின் உரிமை 15 கோடியும், ஒரிசா 25 லட்சம், வெளிநாட்டு தியேட்டர்களுக்கு 70 கோடியும், ஆடியோ ரைட்ஸ் 24 கோடிக்கும் விலை பேசப்பட்டுள்ளது. ஆக 416.25 கோடியாக விற்பனையாகி உள்ளது.
இதையும் படிங்க... விஜய் விழாவில் சங்கீதா ஆப்சண்ட்… காரணம் கேட்டதற்கு கேள்வியால் மடக்கிய தயாரிப்பாளர்
அதனால் இப்போதைக்கு இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் லாபம் 83.10கோடி. அதே நேரம் லியோ 436 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளது. அதே நேரம் வெளிநாட்டு உரிமையில் கோட் முன்னிலையில் உள்ளது. லியோவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கோட் படத்துக்கு அப்படி இல்லை. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.