கோட் படத்தின் வில்லன்… கேமியோ ரோலில் முன்னணி நாயகி… அப்டேட்களால் திணறடித்த படக்குழு!...

by Akhilan |
கோட் படத்தின் வில்லன்… கேமியோ ரோலில் முன்னணி நாயகி… அப்டேட்களால் திணறடித்த படக்குழு!...
X

Goat Movie: விஜய் நடிப்பில் உருவாகும் இறுதி படங்களில் ஒன்றாக இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம். இப்படத்தின் அப்டேட்கள் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் பல சுவாரசிய தகவல்களுடன் அப்டேட்கள் வரிசையாக கசிந்து வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, அஜ்மல், மைக் மோகன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிப்பதாக தகவல்கள் தெரிவித்தது.

மேலும் இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இது சயின்ஸ் பிக்சன் படமாக உருவாவது குறித்து படத்தின் ஆரம்பகட்ட பணிக்காக படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றபோதே வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதில் விஜயின் இளமை பருவத்திற்காக உயர்ரக விஎஃப்எக்ஸ் செய்யப்பட்ட இருக்கிறதாம்.

இந்நிலையில் இப்படத்தல் யார் வில்லனாக இருப்பார் என ஒரு சந்தேகம் பல நாட்களாக நீடித்து வருகிறது. ஏற்கனவே மைக் மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் படத்தில் இணைந்த நிலையில் இவர்கள்தான் வில்லன் வேடத்தை ஏற்பார்கள் என சிலர் கிசுகிசுத்தனர். ஆனால் தற்போது வந்த தகவலின் படி வில்லனாகவும் விஜய் நடிக்க இருக்கிறார்.

அதாவது, ஹீரோவும் அவரே வில்லனும் அவரே. இதில் இள வயது லுக்கில் வரும் விஜய் தான் வில்லனாக இருப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுக்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய் மற்றும் பிரபுதேவா இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கின்றனர். இதற்கு முன் போக்கிரி படத்தில் இருவரும் சில நொடிகளுக்கு நடனமாடி இருப்பார்கள்.

இந்த பாட்டில் முழுக்க முழுக்க இருவருமே இணைந்து ஆட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் திரிஷா கேமியா ரோலில் சில நிமிடங்கள் வர இருக்கிறாராம். அதற்காக கடந்த இரண்டு நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டாராம். அந்த காட்சிகளில் கோட் மொத்த குழுவும் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

மங்காத்தா திரைப்படத்துக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்திலும், விஜயுடன் ஆறாவது முறையாகவும் திரிஷா நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story