ஏன்மா உன் வாய் சும்மா இருந்து இருக்கலாமே? கோட் தங்கச்சியால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு

by Akhilan |
ஏன்மா உன் வாய் சும்மா இருந்து இருக்கலாமே? கோட் தங்கச்சியால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு
X

GOAT

Goat: தமிழ்சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் பல நடிகர்களின் ரெவ்ரென்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த விஷயமே வினையாகி இருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருக்கிறார். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: அஜித்தை சீண்டிய ஏஜிஎஸ்… ட்விட்டரில் வச்சி செய்யும் ரசிகர்கள்… நல்லாவா இருக்கு இதெல்லாம்?

அதுமட்டுமல்லாமல், படத்தில் விஜயகாந்தின் ஏஐ காட்சிகள், திரிஷாவின் குத்தாட்டம், சிவகார்த்திகேயன் எண்ட்ரி, ஜெயிலர் பாடல், அஜித்தின் டயலாக் என அனைத்து ரசிகர்களையுமே கவரும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது. அதிலும் கிளைமேக்ஸில் தல என்ற டயலாக்குக்கே திரையரங்குகள் தெறித்தது.

ஆனால் இந்நிலையில் நேற்றில் இருந்து தயாரிப்பு குழுவை தல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவும் அந்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அஜித்தை மோசமாக விமர்சித்த ட்வீட்டை ஏஜிஎஸ் நிறுவனம் லைக் செய்திருந்தது. அதை ஸ்கீரின்ஷாட்களாக வெளியிட்டு திட்டிவந்தனர்.

இதையும் படிங்க: ஏர்போர்ட்டிலேயே அலப்பறையா? ரஜினிகாந்த் வில்லனை கட்டம் கட்டி தூக்கிய போலீசார்

அது முடியாமல் இருக்கும் நிலையில், படத்தில் விஜயின் தங்கையாக ஜீவிதா கேரக்டரில் நடித்த நடிகை தல என்பது தோனியாக கூட இருக்கலாம் எனப் பேசி இருக்கிறார். கிரிக்கெட் போட்டியில் தோனியை தானே சொல்ல முடியும் என அவர் கேட்க பேட்டியில் தொகுப்பாளினி மங்காத்தா மியூசிக் வந்ததே எனக் கேட்க அதை சமாளித்து பேசினார்.

Thala

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகும் நிலையில் இதெல்லாம் தேவையா? அஜித்தை அசிங்கப்படுத்த செய்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியது. சுயநலவாதி வெங்கட்பிரபு என்ற ஹேஸ்டேக்குகளையும் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story