என்னது கோட் படம் துப்பாக்கி மாதிரி இருக்குதா... வச்சக் குறித் தப்பாது...!
தளபதி விஜயின் 68வது படமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் கோட். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதன் சுருக்கம் தான் கோட். விஜய், மீனாட்சி சௌத்ரி, மால்விகா சர்மா, பிரசாந்த், ராகவா லாரன்ஸ், பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, யோகிபாபு, மோகன், சினேகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
வரும் ஆசிரியர் தினத்தன்று அதாவது செப்டம்பர் 5ம் தேதியன்று இந்தப் படம் ரிலீஸாகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தைப் பார்க்கும்போது விஜயின் அரசியல் பயணத்துக்கு இது ஒரு அச்சாரமாக இருக்கும் என்றே தெரிகிறது. ஏன்னா துப்பாக்கியிலும் விஜய் அரசியல் பேசி இருப்பார்.
இந்தப் படமும் அந்த அமைப்பைப் பார்க்கும்போது துப்பாக்கி மாதிரி இருப்பதாக பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
கோட் படம் துப்பாக்கி மாதிரி இருக்கும்னு எனக்கு ஒரு ஃபீல். அப்படி ஒரு இன்டலிஜண்ட் படமா இருக்கும். நான் இதுல கெஸ்ட் ரோல் தான். வெங்கட்பிரபு ஆசைப்பட்டார். அதனால ஒரே ஒரு நாள் தான் ஒர்க் பண்ணினேன். ஆனா எனக்கு அமைஞ்ச டயலாக் பிரமாதம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் களம் இறங்க உள்ள நிலையில் விஜய் எந்தப் படத்தில் நடித்தாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் வரும். அந்த வகையில் கோட் முதலாவதாக வருவதால் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டன.
2012ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் துப்பாக்கி. அந்தப் படத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், வித்யூல் ஜம்வால், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். கூகுள் கூகுள், வாடி வாடி ஆகிய பாடல்கள் பட்டையைக் கிளப்பின. இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம். இந்தப் படம் மாதிரி கோட் இருந்தா நிச்சயம் வெற்றி தான். வச்சக்குறி தப்பாது..!