பஞ்சாயத்தே இல்லாம வந்துருக்கேன்னு பார்த்தா கோட் படத்துக்கு இவ்வளவு தலைவலியா?

விஜய் படத்துலயே பஞ்சாயத்து இல்லாம ரிலிஸ் ஆகிற ஒரே படம் கோட் தான். இந்தப் படத்துக்கு எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. எந்த வித ஹைப்பும் இல்லாம வந்த படம்னு சொன்னதும் அந்த நம்பிக்கையை சுக்குநூறா உடைச்சிடுச்சு என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. இவர் மேலும் என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.

காவலன் படத்துக்கு சேட்டிலைட் டிவி உரிமை வாங்கின பஞ்சாயத்து, திமுகவுக்கும், விஜய்க்குமான ஒரு விஷயமாக மாறியது. அப்புறம் அந்த நேரத்தில் வெளியான சிறுத்தைப் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அது ஒரு வழியா முடிஞ்சுப் போனது. முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலிலதா முதல்வராக இருந்த போது தலைவான்னு ஒரு படம். அதுக்கு டைம் டு லீடுன்னு கொடுத்து அந்தப் பஞ்சாயத்து தெரிந்த விஷயம் தான். ரிலீஸான ஒரே காட்சி தான்.

ஊரு முழுக்க தியேட்டர்ல வெடி வச்சிருக்காங்கன்னு நிறுத்தி அடுத்த சில மணி நேரங்களில் அந்தப் படம் திருட்டு விசிடியாக வெளியாகி திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அப்புறம் கத்தி படம். ராஜபச்சேயின் நெருங்கிய உறவினர் தான் லைகாவின் சுபாஷ்கரன். இவங்க எப்படி தமிழகத்துல படம் எடுக்கலாம். அப்படின்னு தமிழ் ஆர்வலர்கள் ஆடியோ லாஞ்சைத் தடுத்து நிறுத்தினாங்க. அப்புறம் லைகா வெளியிட்ட அறிக்கையால் கத்தியை ரிலீஸ் பண்ணினாங்க.

Also read: கோட் ரிலீஸ்!.. ரசிகர்களுக்கு விஜய் சொன்ன அறிவுரை! கரெக்ட்தான்.. ஆனா கேட்கணுமே!..

மெர்சல் படத்துக்கு ஜிஎஸ்டி வசனம் காரணமாக விஜய் வீட்டில் ரைடு எதிரொலித்தது. சர்கார் படத்துல விலையில்லா பொருள்களை உடைத்து பஞ்சாயத்து வந்தது. அந்த வகையில் கோட் படத்துக்கு பஞ்சாயத்தே இல்லையேன்னு ஆச்சரியமாக இருந்தது. தியேட்டர்காரர்களில் முக்கால்வாசிப் பேர் படத்தை ஓட்ட மாட்டோம்னு முடிவுக்கு வந்துட்டாங்க.

Goat

Goat

என்ன காரணம்னா முதல் நாள் 700 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை அதிகமான விலைக்கு டிக்கெட்டை விற்க வேண்டும் என்று தமிழ்நாடு உரிமை வாங்கிய விநியோகஸ்தர்கள் அழுத்தம் கொடுக்கிறார்களாம். எங்களுக்கு ரசிகர்களின் தலையில் கட்டறதுல விருப்பமில்லை. இந்த விலைக்கு டிக்கெட்டை விற்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்களே எந்த விதத்தில் நியாயம்னு கேட்குறாங்க.

விஜய் படத்துக்கு ஏ கிளாஸ் ஆடியன்ஸ் கிடையாது. இவர்கள் எல்லாம் சாமானிய நிலையில் உள்ளவர்கள். மிகத் தீவிர ரசிகர்கள். உண்மையிலேயே தியேட்டர்காரங்க எடுத்த இந்த நிலைப்பாடு வரவேற்க வேண்டிய விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் தளபதி விஜயின் கோட் படம் வெளியாவதையொட்டி தற்போது புதுசா ஒரு பஞ்சாயத்து கிளம்பியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

Related Articles
Next Story
Share it