இதுக்கூட நல்லா தானப்பா இருக்கு… கோட் படத்தில் தலயா?… என்னங்க இப்படி?

by Akhilan |
இதுக்கூட நல்லா தானப்பா இருக்கு… கோட் படத்தில் தலயா?… என்னங்க இப்படி?
X

GoatMovie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் முக்கிய இணையத்தில் லீக்காகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் ஆச்சரியத்தில் உள்ளனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி வரும் படத்தில் விஜய் அப்பா மகன் என இருவரிடத்தில் நடிக்கிறார். இப்படம் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன் படத்தின் காப்பியாக உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

இப்படத்தில் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்டப் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. அந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ள விஜய் நேற்று பல வருடம் கழித்து கேரளாவுக்கு சென்று இருக்கிறார்.

அவரை ரசிகர்கள் கோலாகலத்துடன் வரவேற்ற வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கிளீன் ஷேவ் லுக்கில் இருக்கும் விஜயை காண ஏர்போர்ட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியது அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் காரில் ஏறி கிளம்பி சென்றார்.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

இந்நிலையில், கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் நடக்க இருக்கும் கேரளா ஸ்டேடியத்தில் தோனி புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் நிறைய ஊட்டப்பட்டு இருக்கிறதாம். அது மட்டுமில்லாமல் கோட் திரைப்படத்தில் தோனி ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது.

ஏற்கனவே ஐபிஎல் தொடங்க இருக்கும் நிலையில் தோனி தென்னிந்திய நகரங்களில் இருப்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்கும் என ரசிகர்களும் நம்புகின்றனர். இப்படி ஒரு காட்சி உருவாகும் பட்சத்தில் அது ஒரு திரைப்படத்திற்கு மிகப்பெரிய வலுவை சேர்க்கும் எனவும் ரசிகர்கள் நம்புகின்றனர்.

Next Story