கோட் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… 18 வருஷம் கடந்து நடக்கும் மேஜிக்…
GoatMovie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த காம்போ ஏற்கனவே ஒருமுறை ஹிட் கொடுத்த டீம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்திரி, எஸ் ஜே சூர்யா, மைக் மோகன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?
படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் அதிகரிக்க செய்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. படத்தில் முதல் சிங்கிள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் மற்ற படங்களைப் போல இல்லை என்ற ஏமாற்றம் ரசிகர்களிடம் இன்னமும் இருக்கிறது.
இதனால் அடுத்த சிங்கிளுக்கான வேலையில் பட குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. விஜயகாந்த் ஏஐ, சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய வீரர்கள் என படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் விஷயங்கள் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதையும் படிங்க: சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!
இந்நிலையில் இப்படத்தில் மலேசியா வாசுதேவனின் மகனும், நடிகருமான யுகேந்திரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்திலும் யுகேந்திரன் வில்லன் கதாபாத்திரமே ஏற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரின் காட்சிகள் ரஷ்யாவில் ஷூட் செய்து இருக்கின்றனர். வெங்கட் பிரபுவும் யுகேந்திரனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்த விஷயத்தினை யுகேந்திரனே தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இவர் விஜயுடன் இணைந்து யூத் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் என்பதால் ரசிகர்கள் இப்போதே பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.