டபுள் ஆக்‌ஷனில் தெறிக்கவிட்ட விஜய்!.. இந்த வருஷத்தோட வெயிட்டான சம்பவமாக மாறும் கோட்!.. செம சீன்!..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் தளபதி 69 படத்துக்கு 275 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள கோட் படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

அதிகபட்ச சம்பளம் வாங்கினாலும் அதற்கு ஈடு இணையாக தனது உழைப்பை படத்தில் வெளிக்காட்டி மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி விடுகிறார் விஜய் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:விஜயால் அந்த ஒரு பெருமைக்கு ஆளான சூப்பர் குட் பிலிம்ஸ்! எல்லாம் அந்த பாடல் செய்த மேஜிக்

இன்று 50-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களை விஜய் வேண்டாம் என்று சொன்னாலும், தனது ரசிகர்களுக்காக கோட் படத்தின் அப்டேட்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார். நள்ளிரவு 12:00 மணிக்கு சார்பாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கோட் ஷாட்ஸ் ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களையும் இரவு முழுக்க தூங்க விடாமல் ரீட்வீட், ஷேர், ரிப்பீட் மோடில் பார்க் வைப்பது என பாடாய் படுத்துவிட்டது.

கோட் படத்தின் டீசர் வெளியான அளவுக்கு சந்தோசத்தை இந்த சூப்பரான ஒரே ஒரு சின்ன காட்சி ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என டபுள் ஆக்ஷனில் விஜய் நடித்து வரும் நிலையில், அப்பாவும் மகனும் ஒன்றாக எதிரிகளை பைக் சேஸிங்கில் எதிர்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விஜய் பிறந்தநாளுக்கு 2 படம் ரீ ரிலீஸ்!..அட்வான்ஸ் புக்கிங் எத்தனை லட்சம் தெரியுமா?!..

இந்த கோட் ஷாட்ஸ் பல மில்லியன் வியூஸ் கடந்து புதிய ரெக்கார்டை யூடியூப் இல் படைக்கும் பணியை விஜய் ரசிகர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். வயதான அப்பா மற்றும் இளமையான விஜய் என இரண்டு கெட்டப்புகளில் விஜய் அழகாக தெரிகிறார் என்றும் நிச்சயம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் வேட்டை படமாக கோட் அமையும் என்றும் கூறுகின்றனர்.

அடுத்ததாக, இன்று மாலை 6:00 மணிக்கு கோர்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலும் ரசிகர்களுக்காக வெளியாக காத்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் மறைந்த பின்னணிப் பாடகி பவதாரணி அந்தப் பாடலை பாடியுள்ளனர்.

இதையும் படிங்க: சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண சூர்யா!.. தட்டி தூக்கிய பிரசாந்த்!.. அட அந்த படமா!..

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/archanakalpathi/status/1804220286126166041

Related Articles
Next Story
Share it