Connect with us

Cinema News

கோட்டில் சிவகார்த்திகேயனுக்கு அந்த டயலாக்கை போட்டதே விஜய்தானாம்… பக்கா ஸ்கெட்ச்தான்!

Goat: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய், பிரசாந்த், சினேகா, லைலா, பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். முதல்முறையாக இப்படத்தில் மோகன் வில்லன் வேடம் ஏற்று இருக்கிறார்.

இதையும் படிங்க: வசூலில் இந்திய அளவில் விஜய்தான் நம்பர் ஒன்.. அட ரஜினி, ஷாருக்கான் கூட இல்லயே!…

இப்படத்தில் விஜயின் டிஏஜிங் காட்சிகளை போல பிரபலங்களின் கேமியோக்களும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வகையில் நடிகை திரிஷா மட்ட பாடலில் சில நொடிகள் டான்ஸ் ஆடி அசத்திருப்பார். அதுபோல நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய காட்சிகளில் தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

GOAT

பல வருடங்களாகவே சிவாவின் சினிமா மீதான உழைப்பை விஜய் பார்த்து வந்து இருக்கிறார். அவருக்கு தான் கொடுக்கும் ஸ்பெஷல் கௌரவமாகவே இந்த கேமியோ காட்சி அமைந்திருக்கிறது. அக்காட்சியில் சிவா மற்றும் விஜய் நடித்த சுவாரஸ்ய தருணம் குறித்து வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்து வேட்டையன் வராரு! ரெடியா இருங்க.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?

அதுகுறித்து அவர் பேசும்போது, அந்த காட்சியில் முதலில் இதை பிடிங்க சிவா. யாராச்சும் வந்தா சுட்டுடுவேன்னு மிரட்டுங்க எனச் சொல்லி இருந்தேன். ஆனால் அந்த காட்சியின் போது விஜய் சார் தான் துப்பாக்கிய புடுங்க சிவா. இத்தனை பேர உங்ககிட்ட ஒப்படைச்சிட்டு போறேன் என மாற்றி பேசி இருப்பார்.

அது மிகப்பெரிய விஷயம். அந்த காட்சிக்கு பின்னர் சிவகார்த்திகேயனுக்கு என்ன ஆனது எனவும் ஷூட் செய்திருந்தோம். ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சியை நீக்கப்பட்டுவிட்டது. விரைவில் டெலிடட் காட்சியாக அதை வெளியிடுவோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

google news
Continue Reading

More in Cinema News

To Top