கோட் டிக்கெட் விலை 2 ஆயிரமா? ரசிகர்களிடம் ஏன் பிடுங்கி திங்கிறீர்கள்… விளாசும் பிரபலம்
Goat: விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்தின் டிக்கெட் விலை உச்சத்தில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. நடிகர் விஜய் இப்படி செய்யலாமா என பிரபலத்தில் விமர்சகர் செய்யாறு பாலு பேசியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். பல வருடங்களுக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியாகும் ஒரு படத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பது என்னவோ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு மட்டும்தான். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இதையும் படிங்க: விஜயகாந்த்தான் நடிக்கனும்னு கட்டாயம் ஏன்! அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்
இதற்கு முன்னர் காவலன் திரைப்படத்திலிருந்து தொடர்ச்சியாக விஜயின் திரைப்படம் சர்ச்சைகளை மட்டுமே சந்தித்து வந்தது. அதைத்தொடர்ந்து தலைவா திரைப்படத்தில் இருந்த டேக்லைனால் ஏற்பட்ட சர்ச்சை, இதனால் கடுப்பான சிலர் பிரச்சினைகளைத் தாண்டி வெளியான அப்படத்தை திருட்டு விசிடிகளால் வெளியிட்டனர்.
தொடர்ந்து கத்தி திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சினை, சர்க்கார் திரைப்படத்தில் அரசு உதவியை கேலி பேசியதாக சர்ச்சை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தொடர்ச்சியாக வித்தியாசமான தொல்லைகளை விஜய் திரைப்படத்திற்கு கொடுத்து வந்தனர்.
தற்போது இது எதுவும் இல்லாமல் கோட் திரைப்படம் ரிலீஸை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் எங்கிலும் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பிரச்சனை கசிய தொடங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: மாநாடு ஃப்ளைட் சீன்னில் நடந்த குளறுபடிகள்… சிம்புவை போட்டு படுத்திய வெங்கட்பிரபு
அதாவது தியேட்டர் கவுண்டரிலையே படத்தினை 2000 ரூபாய் வரை ஏற்றி விற்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக சில தியேட்டர்காரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ரோகிணி தியேட்டர் 300 ரூபாய்க்கு விற்ற போதே அது ஸ்னாக்ஸ் உடன் காம்போவாக வருவதால் ரசிகர்கள் சிலர் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் சம்பந்தமே இல்லாமல் 800 ரூபாய்க்கும், 1000க்கும் உயர்த்தி தற்போது 2000 விற்பது சரியாக இருக்காது. ரசிகர்களிடம் பிடுங்கி சாப்பிடுவது சரியா? இவ்வளவு ரூபாயிற்கு விற்கும் போது படம் கொஞ்சம் மிஸ்ஸானால் கூட பெரிய அடியை வாங்கும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.