எப்பவும் நான்தான் கிங்!.. நிரூபித்த விஜய்!.. கோட் டிரெய்லர் வீடியோவின் வியூஸ் இதுதான்!...

Goat trailer: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் கோட். ஏனெனில், அஜித்துக்கு ஒரு மங்காத்தா போல விஜய்க்கு மாஸான ஒரு படத்தை வெங்கட்பிரபு கொடுத்திருப்பார் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

மேலும், பல வருடங்களுக்கு பின் மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதுவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே 3 பாடல்கள் வெளியானாலும் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: டபுள் தளபதி சம்பவத்துக்கு ரெடியா? நீங்களே இப்படி இறங்கி வந்தா எப்படி? பெரிய இடமே சொல்லியாச்சு…

ஆனாலும், படம் வெளியானால் அது மறைந்து போய்விடும் என நம்பப்படுகிறது. இந்நிலையில்தான், கோட் படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. சார்ஸ் என சொல்லப்படும் தீவிரவாத கும்பலை அழிக்கும் ஒரு குழுவின் தலைவனாக விஜய் இருக்கிறார். இளமையில் தீவிரவாத கும்பல் ஒன்றை அழிக்க பின்னாளில் அது பிரச்சனையாக உருவெடுக்கிறது.

விஜயால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவராக மைக் மோகன் நடித்திருப்பதாக தெரிகிறது. இந்த டிரெய்லரில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், ஹாலிவுட் ரேஞ்சுக்கு சேசிங் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. கண்டிப்பாக மங்காத்தாவை விட கோட் படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

goat

மேலும், விஜயை ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் மிகவும் இளமையாக காட்டி இருக்கிறார்கள். டிரெய்லரில் வரும் சில காட்சிகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக விஜய் படம் தொடர்பான வீடியோக்கள் யுடியூப்பில் அதிக வரவேற்பை பெறும். கோட் படத்தின் டிரெய்லர் வீடியோவும் சாதனைகளை செய்து வருகிறது.

வீடியோ வெளியாகி 2 மணி நேரத்தில் 5 மில்லியனுக்கும் (50 லட்சம்) அதிகமான பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். வீடியோ வெளியாகி ஒரு மணி நேரத்தில் 2.5 மில்லியனை தாண்டியது. இன்னும் போகப்போக இந்த டிரெய்லர் வீடியோ யுடியூப்பில் சாதனைகளை செய்யும் என கணிக்கப்படுகிறது.

Related Articles
Next Story
Share it