நாங்க பெருசா பண்ணிட்டு இருக்கோம்… கோட் தயாரிப்பாளர் போஸ்டால் எக்ஸ் தளமே சூடா இருக்கே!..
விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என தகவல்கள் கசிந்த நிலையில் அர்ச்சனா கல்பாத்தியின் எக்ஸ் பதிவால் விஜய் ரசிகர்கள் செம குஷியாகி இருக்கின்றனர்.
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம். வெங்கட் பிரபு இப்படத்தினை இயக்கி வருகிறது. இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, எஸ்.ஜே.சூர்யா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் படத்துல கண்ணியம் இருக்கு! ஆனா அவர் படத்துல? ஐயோ வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டார் போல
இப்படம் ஹாலிவுட்டில் வில் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் படத்தின் மறு உருவாக்கமாக அமைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு ஏற்ப விஜய்யின் ஆண்ட்டி ஏஜிங் காட்சிகளும் அமைந்து இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த காட்சிகள் கூட ஸ்பார்க் பாடலில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவும் படத்திற்கு புரோமோஷனாகவே படக்குழு எடுத்துக்கொண்டு இருக்கிறதாம்.
இதையும் படிங்க: ‘தங்கலான்’ படத்தை சத்தியமா பார்க்க மாட்டேன்! படமா எடுக்குறானுங்க? இவரே இப்படி சொல்லலாமா?
பாசிட்டிவாக இருந்து அது படத்தினை சொதப்புவதற்கு விமர்சிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெறலாம் என படக்குழு முடிவெடுத்து இருக்கிறது. இந்நிலையில் கோட் படத்தின் டிரெயிலர் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அர்ச்சனா கல்பாத்தி தரப்பில் இருந்து தற்போது ட்வீட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில், உங்களுக்காக அமேசிங் டிரெயிலரை ரெடி செய்து வருகிறோம். அதனால் அமைதியாக இருந்து இரண்டு நாட்கள் தாருங்கள். நாளை சரியான அப்டேட்டை வழங்குகிறோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.