பேமெண்ட் வரலையா…கோட் படத்தை கண்டப்படி துப்பி வச்சிருக்காரே… பாண்டா பிரசாந்த்
TheGoat: விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் கோட் திரைப்படத்தை பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் கடித்து துப்பி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வருடம் தொடக்கத்திலிருந்து மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமலே இருந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக தான் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாகி இருக்கிறது. இதில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், பிரேம்ஜி பலர் இணைந்து நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருந்தார்.
படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை படக்குழு தங்களுடைய பேட்டிகள் மூலம் உருவாக்கியிருந்தது. கண்டிப்பாக கோலிவுட்டில் தவிர்க்க முடியாத படமாக கோட் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று படம் வெளியாகி இருக்கும் நிலையில் கலவையான விமர்சனங்களையே பார்க்க முடிகிறது.
இதையும் படிங்க: நீங்க நடிச்சா போதும்… இந்த கிளாமர் ஆசை வேறையா? பிரியா பவானி சங்கர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்
இந்நிலையில் பிரபல திரைவிமர்சகர் பிரசாந்த் கூறுகையில், நான் பாலக்காட்டில் முதல் ஷோ படம் பார்த்துவிட்டேன். படத்தில் எல்லோரும் சொல்வது போல் யுவனின் பின்னணி இசை பட்டையை கிளப்பி இருக்கிறது. அதை போல் விஜய்யும் தனியாளாக இப்படத்தை தூக்கி சுமந்திருக்கிறார். ஆனால் படத்தில் முதல் 45 நிமிடங்கள் ரொம்பவே ஸ்லோவாக தான் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் படத்தின் டிஎஜிங் சரியாக அமைந்துவிட்டாலும் பல இடங்களில் சொதப்பல் தான் நடந்திருக்கிறது. படத்தில் வில்லனாக நடித்திருந்த மோகன் அதற்கு சரியான கேரக்டரே இல்லை. பயங்கரமில்லை அவர் மீது பயம் கூட வரவில்லை. லாஜிக் யோசிக்காதவர்களுக்கு இந்த படம் பிடிக்கும். கேமியோவை வைத்தே படத்தை ஓட்டி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அந்த ட்வீட்டைக் காண: https://x.com/mrharichandrar2/status/1831559436424638880