கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ஏன்? ஆமால சரியான காரணமா இருக்குல!..
Venkat Prabhu: கோட் திரைப்படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவாவை நடிக்க வைத்த காரணம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
விஜய் தன்னுடைய அரசியல் கட்சியில் முழுமையாக இணைய போகும் நிலையில் அவருடைய கடைசி சில படங்களில் ஒன்றாக அமைய இருக்கிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட அறிவிப்பு வெளியான போதே ஏகப்பட்ட நட்சத்திரங்கள் படத்தில் இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் கூட இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இத்தனை பேர வச்சு உன்னால சமாளிக்க முடியுமா? என்ன தான் பண்ண போற என்னும் அளவுக்கு கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இருந்தும் அவர்களுக்கான முறையான திரைக்கதையை அமைத்திருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.
இருந்தும் இப்படத்தில் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் இணைந்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் விஜய் சினிமாவில் உயர்ந்து கொண்டிருந்தபோது உச்ச நட்சத்திரமாக இருந்தவர் பிரசாந்த். அவரை உள்ளே அழைத்து வர என்ன காரணம் என வெங்கட் பிரபுவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மலையாள கதையே ஓயலை… தெலுங்கு சினிமா பக்கம் பிரச்னை பத்திக்கொண்டதாம்.. பதற்றத்தில் பிரபல ஹீரோக்கள்
அது குறித்து பேசியவர், 90ஸ் நாயகர்கள் விஜயுடன் இணைந்து நடித்தால் அது சரியாக இருக்கும் என நினைத்தேன். ஏனெனில் இள நடிகர்களை விஜயை மச்சான் என கூப்பிட்டு சாதாரணமாக பேச இயலாது. இதுவே 90 நாயக்கர்கள் என்றால் அவர்களை நாம் 30 வயதிலும் பார்த்திருக்கிறோம் தற்போதும் பார்த்திருக்கிறோம். அதை ரசிகர்களால் எளிதாக கையாள முடியும் என நினைத்தே பிரசாந்த் மற்றும் பிரபுதேவாவை படத்தில் இணைத்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.