‘கோட்’ படத்திற்கு வெங்கட் பிரபு சொன்ன புரமோஷன் இதுதானா? இவ்ளோ பெருசா?
Goat Movie: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்று சினேகா நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் இணைந்து லைலா, பிரசாந்த், பிரபுதேவா போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா.
படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே அஜித்திற்கு மங்காத்தா என்ற ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்த வெங்கட் பிரபு கண்டிப்பாக விஜய்க்கு அதே மாதிரியான ஒரு ஹிட்டை கொடுப்பார் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் 69 படத்துக்கு ஆப்பு வைத்த கமல்?!.. என்ன பண்ணப் போறாரோ ஹெச். வினோத்!…
அதோடு விஜய் அரசியலுக்கு காலடி வைத்த நேரம் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்புகின்றனர். அதனால் கோட் படத்தை பெரிய அளவில் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என வெங்கட் பிரபு தரப்பிலும் தயாரிப்பு தரப்பிலும் நினைத்து வருகிறார்கள்.
ஆனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை பாடல்கள் சுக்கு நூறாக்கிவிட்டது என்றே சொல்லலாம். விஜய் படங்கள் என்றாலே பாடலுக்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்கும் என அனைவருக்கும் தெரியும் . ஆனால் கோட் படத்தை பொறுத்தவரைக்கும் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.
இதையும் படிங்க: விஜயிற்கு என்னெல்லாம் நினைச்சீங்களோ… கோட்டில் அது இருக்கு.. வெங்கட் பிரபு கொடுத்த சூப்பர் அப்டேட்…
அதனால் படத்தை எப்படியாவது பெரிய அளவில் கொண்டு போக வேண்டும் என ஒட்டுமொத்த படக்குழுவும் தீவிரமாக இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். மேலும் டிரெய்லரையாவது பெரிய அளவில் கொண்டு போக வேண்டும் என நினைத்திருக்கின்றனர்.
இதில் படத்தின் புரோமோஷனை யாரும் எதிர்பாராத அளவுக்கு கொண்டு போக வேண்டும் என வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். அதாவது 14000 அடி உயரத்தில் வானில் மிகப்பெரிய அளவுக்கு புரோமோஷனை நடத்த திட்டமிட்டிருப்பதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்தோட சரிவுக்குக் காரணமே அதுதானாம்… லியாகத் அலிகான் சொன்ன அந்தத் தகவல்
அது சம்பந்தமான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரஜினியின் கபாலி படத்தை போன்றே கோட் படத்தின் புரோமோஷனையும் விமானத்தில் பறக்க விட இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவில் பெரிய புரோமோஷனாக தமிழ் சினிமாவில் கோட் படத்திற்காக இருக்கும் எனவும் வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஒரு வேளை உயரத்தை குறிப்பிட்டு அப்படி சொன்னாரா என தெரியவில்லை.
இதோ அந்த வீடியோ லிங்க்: