Cinema News
கோட் படத்துல தெறிக்க விட்ட ஸ்பார்க் சாங்… 100 லாரி தண்ணீர், செட் போட 8 நாளாம்..!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது.
இந்தப் படம் வசூலிலும் களைகட்டி வருகிறது. முதல் நாளே உலகெங்கும் 126 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. படத்தில் செட் ரொம்பவே பேசும்படியாக உள்ளது. இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் வரும் கிரிக்கெட் ஸ்டேடியமும் சரி. படத்தில் வரும் உச்சக்கட்ட காட்சியே அது தான்.
அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்தப் படத்துல ஒரு பாட்டுக்கு 100 லாரி தண்ணீரைக் கொண்டு வந்தாங்களாம். அது என்னன்னு பார்க்கலாமா…
கோட் படத்தில் 3 நிமிடமே வரும் ஸ்பார்க் பாடலுக்கு இவ்வளவு செலவான்னு பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பிரசாத் ஸ்டூடியோவில் இதற்காக மொத்தம் 8 நாள் செட் போட்டாங்களாம்.
அதிலும் கடைசி நாள் தான் அருவி மாதிரி அமைப்பைக் கொண்டு வரலாம்னு நினைச்சாங்களாம். இதற்காக முதல்ல 12 ஆயிரம் லிட்டர் பிடிக்கும் 42 லாரிகளுக்குப் பிளான் பண்ணிருக்காங்க. அப்புறமா தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால 100 லாரியா அதிகமாயிடுச்சாம்.
சூட்டிங் நடக்குறப்ப தண்ணீயோட லெவல் குறையவே கூடாதாம். 2 நாள் சூட்டிங் நடந்தாலும் லாரி வெளியே தண்ணீரோட தயாரா இருக்குமாம். அங்க நிறைய மரங்கள் இருந்ததால தண்ணீர் போய்க்கிட்டே இருந்தது. எங்குமே தேங்கல. இதனால செட் முடிஞ்சி போகும்போது தண்ணீரை எடுக்குற பிளானே எங்களுக்கு இல்லை.
கிளைமாக்ஸ் காட்சியிலும் ஒரிஜினல் ஸ்டேடியம் மாதிரியே இருந்தது. திருவனந்தபுரத்துல எடுத்தோம். ஒரிஜினல் ஸ்டேடியத்துல இருக்குற அத்தனை விஷயங்களையும் கொண்டு வந்தோம்னு செட் போட்டவங்களே சொல்றாங்க.
Also read: கோட் படத்துக்கும் ராஜதுரைக்கும் இவ்ளோ ஒற்றுமைகளா? எல்லாமே உல்டா தானா!
கல்பாத்தி அகோரம் டீமின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான பாடல் தான் 3வது சிங்கிளாக வந்த ஸ்பார்க் சாங். இதுல அவ கண்ணாலப் பார்த்தா ஒரு ஸ்பார்க்னு பாடல் அட்டகாசமாக வரும்.
இந்தப் பாடலை முதலில் தேவைதானான்னு எல்லாம் யோசிச்சாங்களாம். ஒரு வேளை இந்தப் பாடல் படத்தில் இடம்பெறாமல் போயிருந்தால் இவ்வளவு அற்புதமான செட்டை நாம் பார்த்திருக்க முடியாது.