குட்பேட் அக்லி முதல் நாள் வசூலில் சாதனை…! பட்டையைக் கிளப்பிடுச்சே!

good bad ugly
good bad ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, பிரியா வாரியர், சிம்ரன், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. ரசிகர்களின் கொண்டாட்டத்துடன்நேற்று வெளியானது. படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். விடாமுயற்சி படத்தில் வழக்கமான அஜித்தைப் பார்க்க முடியாதவர்கள் இந்தப் படத்தில் கொண்டாடித் தீர்த்தார்கள்.
இது ஒரு ஃபேன் பாய் படம். ஆதிக்கே தீவிர அஜித் ரசிகர் என்பதால் படத்தையும் செதுக்கி இருக்கிறார். அஜித் வரும் காட்சி எல்லாம் அழகு. அவர் படத்தில் எந்த லுக்கில் இருந்தாலும் அஜித் அழகுதான். எந்தக் கெட்டப் எந்த உடை அணிந்தாலும் ஒரு ஸ்மார்ட் லுக். படம் முழுக்க அஜித்தின் அட்டகாசம்தான்.
பில்லா, தீனா, வரலாறு, வீரம் என்று பல படங்களின் ரெஃபரன்ஸ் படத்தில் வருகிறது. இது தவிர 3 ரெட்ரோ சாங் வருகிறது. படத்தில் வில்லன் அருள்தாஸ் செமயாகக் கெத்து காட்டி உள்ளார். ஒத்த ரூபா தாரேன் பாடலுடன் அறிமுகமாகும் அவர் போடும் டான்ஸ் செம. அதே போல அஜித் இளமை இதோ இதோ பாடலில் அட்டகாசமாக பைட் செய்து அனைவரையும் அசத்துகிறார்.
அஜீத்தின் குட்பேட் அக்லி முதல் நாளில் இந்திய அளவு வசூல் 28.50 கோடி. உலகளவில் 46 முதல் 50 கோடி வரையும் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. வெளிநாடுகளில் மட்டும் 13 முதல் 15 கோடி வரை வசூல். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி உலகளவில் 48 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிராகன் முதல் நாளில் உலகளவில் வசூல் 11.2 கோடி.