குட்பேட் அக்லியில் வில்லனைத் தேர்ந்தெடுத்ததே அஜீத் தான்..! ஏன்னு தெரியுமா?

ajith, arjun doss
Good bad ugly: குட் பேட் அக்லி படத்தில் வில்லன் அர்ஜூன்தாஸ் அஜித்துக்கு இணையாக மாஸாக நடித்து இருந்தார். மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் விஜய்க்கு டஃப் கொடுத்தார். அதே போல குட் பேட் அக்லியில் 'ஒத்த ரூபா தாரேன்' என்ற குத்துப் பாடலோடு அறிமுகம் ஆகுற சீன் அட்டகாசமாக இருக்கும். சரி. படத்துல அவரை நடிக்கத் தேர்ந்தெடுத்தது யாரு? இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் அந்தணன் சொல்வது இதுதான்.
குட் பேட் அக்லி படத்துக்கு வில்லனைத் தேர்ந்தெடுத்தது அஜித் தானாம். அர்ஜூன் தாஸைப் போடச் சொன்னதே அஜித் தானாம். இந்தக் கேரக்டரில் யாரைப் போடுவதுன்னு ஆதிக் அஜித்திடம் கேட்டாராம். இப்போ அர்ஜூன் தாஸ்னு ஒரு பையன் இருக்காரே… அவரைப் போடுங்க. சரியா இருக்கும்னு சொன்னாராம்.
வளர்ந்து வரும் பையனைத் தனக்குச் சமமாக ஒரு பவர்ஃபுல் வில்லனாக அஜித் போடச்சொன்னது அவரது பெருந்தன்மை. இனி எதிர்காலத்துல அர்ஜூன்தாஸூக்கு சம்பளம் உயரும். பட வாய்ப்பு நிறைய கிடைக்கும். யாரோ ஒருவர் அப்படி பலன் பெறுவதற்கு சினிமாவில் நம்மோடு சேர்ந்து தத்தளிக்கிற கலைஞருக்கு வாழ்வு கொடுப்பது சரியா இருக்கும்னு நினைக்கிறவரு அஜித்.
அதே போல பழைய ட்ரெண்ட்செட் சினிமா பார்முலாவை உடைத்து விட்டு இன்றைய இளம் இயக்குனர்கள் பல புது ட்ரெண்டுகளை உருவாக்கி வர்றாங்க. அவங்களுக்குப் ரஜினி, கமல் மாதிரி பெரிய நடிகர்களும் கைகொடுக்குறாங்க. அது வரவேற்க வேண்டிய விஷயம். கமலின் இளமை இதோ இதோ பாடலுக்கு அஜித் நடனமாட ஒத்துக் கொண்டதும் வரவேற்கத்தக்க விஷயம்.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் இப்ப வரை கொண்டாடிக் கொண்டு இருக்காங்க. எப்போ பொதுமக்கள் பார்த்து மார்க் போடுறாங்களோ அப்ப தான் உண்மையான ரிசல்ட் தெரியும். அதுக்கு வரும் திங்கள்கிழமை வரை வெயிட் பண்ணனும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.