goodbadugly review: புளூசட்டை மாறன் வழக்கம்போலவே அஜித்தின் குட்பேட் அக்லி படத்தையும் பொளந்து கட்டி இருக்கிறார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
படத்துல கதைன்னு பார்த்தா அஜித் ஒரு கேங்ஸ்டர். திரிஷாவைக் கல்யாணம் பண்றாரு. அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்குது. கேங்ஸ்டரா இருக்குறதால குழந்தைக்கு ஆபத்துன்னு நினைச்சி திரிஷா நீ நல்லவனா திருந்தி வா. அதுவரை ஜெயிலுக்குப் போன்னு சொல்ல அஜித்தும் ஜெயிலுக்குப் போறாரு. அங்க 18 வருஷம் இருக்காரு.
அப்புறம் வெளிய வரும்போது மகன் மேல போதைப்பொருள் கடத்தல் பழி விழுது. அவன் ஜெயிலுக்குப் போறான். அப்புறம் மீண்டும் கேங்ஸ்டர் ஆகி பழி வாங்குறாரு. இதுதான் கதை. இதுல முக்கால்வாசியை வாசிச்சே சொல்லிடுறாங்க. அதுபோக படத்துல கூடுதலா 4 சீன் வச்சிருக்காங்க.
டைரக்டர் அஜீத்தோட ஃபேன் என்கிறதால படம் முழுக்க அஜித்தை அவரு என்ன பண்ணிருக்காரு தெரியுமா? என்னன்ன எல்லாம் பண்ணிருக்காருன்னு தெரியுமான்னு ஒவ்வொரு வெர்சனா போட்டுக்காட்டுறாங்க. வர்றவன் போறவன்லாம் பில்டப் கொடுப்பான். ஃபேன் பாய்னா இப்படித்தான் படம் எடுப்பாங்களாம். படிக்கட்டுல ஏறது, இறங்குறது, நடக்குறதுன்னு.
ஃபேன் பாயா இருந்தா அந்தக் காலத்துல மன்னர்களைப் புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசு வாங்குவாங்க. அந்த மாதிரி வாங்கிட்டுப் போங்க. முருகரைப் பார்த்த உடனே அவ்வையார் பழம்நீயப்பான்னு பாடுவாரு. அதுமாதிரி நீ வேணா அஜித்வீட்டு வாசல்ல போய் உட்கார்ந்து பழம் நீயப்பா, பழுத்த பழம் நீயப்பான்னு பாடு. அதை விட்டுட்டு ஃபேன் பாய்னா இப்படித்தான் எடுப்பாங்கன்னுட்டு எங்க தாலியை ஏன்டா அக்குற?
எவனுமே ஆடியன்ஸ்சுக்காகப் படம் எடுக்குறது கிடையாது. எவன் ஹீPரோவோ அவனுக்கு ஃபேன்பாயா மாறி எந்த ஒரு கதையும், திரைக்கதையும் இல்லாம ஒரு செட்டை மட்டும் போட்டுக்கிட்டு துப்பாக்கியை எடுத்து வர்றவன் போறவனை எல்லாம் சுட்டுட்டு படம் முடிஞ்சிப் போச்சுங்கறாங்க. படம் முழுக்க ரெஃபரென்ஸ் ரெஃபரென்ஸ்னு போட்டு சாகடிச்சிட்டாங்க. பழைய பாட்டு ஒண்ணு ரெண்டு இடத்துல வரலாம்.
பொருத்தமா இருந்தா போடலாம். ஆனா படம் முழுக்க பழைய பாட்டை போட்டு அதுவும் முழுப்பாட்டு போட்டு சாகடிச்சிட்டாங்க. மஃப்சல் பஸ்ல வெளியூருக்குப் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. படம் ஆரம்பிச்சி கொஞ்சநேரத்துல இந்தப் படம் விளங்காதுன்னு தெரிஞ்சிப்போச்சு. 10ல 9 பொருத்தம் அதுக்கு இருந்தது. யோகிபாபு வந்து 10 பொருத்தமும் இருக்குன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டாரு.
படத்தைப் பற்றி அஜித், விஜய் ரசிகர்கள் போட்ட டுவிட்டர் சண்டைதான் நல்லாருந்தது. ஜாக்கி ஷெராப், அர்ஜூன்தாஸ் மட்டும்தான் புதுசு. மற்ற எல்லாரும் பழசு. சிம்ரன், ரெடின்கிங்ஸ்லி, சுனில்னு பலர் நடிச்சிருக்காங்க. பல படத்தை ஒண்ணா சேர்த்து புதுசா ஒரு பழைய படத்தை எடுத்து வச்சிருக்காங்க என்கிறார் புளூசட்டை மாறன்.