குட் பேட் அக்லி படக்குழு ரகசியம் இதானா? ஆனா நீங்களாம் கொஞ்சம் வெவரம்தான்…

by Akhilan |
குட் பேட் அக்லி படக்குழு ரகசியம் இதானா? ஆனா நீங்களாம் கொஞ்சம் வெவரம்தான்…
X

good bad ugly

GoodbadUgly: அஜித் நடிப்பில் தற்போது உருவாக்கி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படத்தின் படக்குழு குறித்த முக்கிய ரகசியம் ஒன்று இணையத்தில் கசிந்து இருக்கிறது.

சிலம்பரசன் நடிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரின் முதல் படமே மிகப்பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

இதையும் படிங்க: இங்க இருந்துகிட்டு கேரளாவில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்! பெருசா சம்பவம் இருக்கு

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை எனவும் கூறப்பட்டது. இதில் கவரப்பட்ட நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பளித்தார்.

அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி திரைப்படம். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் 40 சதவீதத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ படக்குழு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படத்தில் நடிக்க இருக்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த த்ரிஷாவை அஜித்தின் பரிந்துரையின் பெயரில் இப்படத்திலும் நடிக்க வைக்க படக்குழு முடிவு எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!

இது மட்டுமல்லாமல் இன்னும் சில பிரபலங்கள் தேர்வு தான் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஹிட் திரைப்படங்களில் இருந்த முக்கிய கேரக்டர்களை தனித்தனியாக தேர்ந்தெடுத்து இப்படத்திற்குள் இணைத்து இருக்கின்றனர்.

good bad ugly

அந்த வகையில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து இருந்த தெலுங்கு நடிகர் சுனில் இப்படத்தில் இணைந்து இருக்கிறார். மலையாளத்தில் இந்த வருட ஹிட் படமான பிரேமலு படத்தின் நஸ்லின், டாக்டர் மற்றும் ஜெயிலர் படத்தில் நடித்த ரெட்டின் கிங்ஸ்லி நடிக்க உள்ளனர்.

மேலும், சலார் படத்தில் சின்ன வயது பிரித்விராஜாக நடித்த கார்த்திகாய தேவ், மகாராஜா படத்தில் நடித்திருந்த பிரபல நடிகர் நட்ராஜ், டாக்டர் படத்தில் நடித்த ரெட்டையர்கள் ரகுராம் மற்றும் ராஜீவ் லட்சுமணன் இப்படத்தில் இணைந்து இருக்கின்றனர்.

Next Story