குட் பேட் அக்லி லீக் புகைப்படங்கள்… பார்க்கவே தெறிக்குதே!… இனி அஜித்தான் எல்லாம்…

Published on: November 28, 2024
good bad ugly
---Advertisement---

Good bad Ugly: ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்காகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர்.

அஜித்குமார் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இப்படத்தின் ரிலீஸையும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: Simran: சிம்ரன் காட்டிய நன்றியுணர்வு.. அசந்து போன கலைப்புலி தாணு! 15 வருடத்துக்கு பிறகும் இப்படியா?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருவதாக கூறப்பட்டது.  ஆனால் தயாரிப்பு குழுவுடன் ஏற்பட்ட திடீர் மனக்கசப்பு காரணமாக அவர் படத்தில் இருந்து விலகி  இருக்கிறார்.

லீக்கான  போட்டோவைக்  காண: https://x.com/TalkiesFriday/status/1861821354007470348/photo/1

தற்போது அவருக்கு பதில் ஜிவி பிரகாஷ் இப்படத்தின் மற்ற இசை பணியை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக படம் ஜனவரி 10ல் வெளியாகும்  எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் தாமதம் ஏற்படலாம்  எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் காட்சிகள் லீக்காகி இருக்கிறது.

பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் அஜித்தை திரையில் காணும் போது ரசிகர்கள் செம குஷியாக வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. குட் பிரசன்னாவும், பேட்டாக அஜித்தும், அக்லிக்கு சுனிலும் என புது கான்செப்ட்டையும் பேசி வருகின்றனர். இதனால் பொங்கலுக்கு வெளியாகும் இத்திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டவும் வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சமரச பேச்சுவார்த்தை!.. நேரில் ஆஜரான ஜெயம் ரவி-ஆர்த்தி ரவி?!… மீண்டும் இணையுமா இந்த ஜோடி?…