அஜீத் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ஃபேன்ஸ் கொஞ்சம் பொறுத்துக்கோங்க!

ajith
Good bad ugly: அஜீத் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. வரும் 10ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தோட டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளமையான அஜீத், சால்ட் பெப்பர் என பல கெட்டப்புகளில் வந்து கலக்குகிறார்.
ஆதிக் ரசிகர்களின் கோணத்தில் படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. எப்போதுமே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தமிழகத்தில் காலைக்காட்சி 9 மணிக்கு இருக்கும். அதுதான் ரசிகர்களுக்கு ஓபனிங் ஷோ.
அதே நேரம் அண்டை மாநிலங்களில் அதாவது கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் எல்லாம் படம் அதிகாலை 4 மணி ஷோ ரசகர்களுக்கு விருந்தாக இருக்கும். இந்தியா முழுக்கவே காலை 9 மணி காட்சி தான் ஓப்பன். இதுக்குக் காரணம் யாருன்னா ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். அவர்தான் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என 3 மாநிலத்தோட தியேட்டரிகல் உரிமையை வாங்கி இருக்காராம். அவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ்கிட்ட ஒரு நிபந்தனை போட்டுருக்காரு.
எங்க ஊருல காலை 9 மணிக்குத் தான் ஷோ ஓப்பன். அதே மாதிரிதான் மற்ற மாநிலங்களிலும் நான் பண்ணப் போறேன். நீங்களும் ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இதையே ஃபாலோ பண்ணுங்கன்னு கண்டிஷன் போட்டுட்டாராம். இது தெரியாம பெங்களூரு, கேரளான்னு ரசிகர்கள் டிக்கெட் போட்டு வச்சிருந்தா அதைக் கேன்சல் பண்ணிடுங்கப்பா. இன்னொரு முக்கியத் தகவல் குட்பேட் அக்லி 2 மணி நேரம் 20 நிமிடம்தான் ரன்னிங் டைமாம்.
அஜீத் படம் என்றாலே அதுல விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. படம் சக்கை போடு போடும். ஏன்னா படத்தில் அஜீத் பார்க்கும்போது மாஸாக இருக்கிறார். இன்னொன்னு படத்தோட நீளமும் குறைவுதான். அதனால படம் விறுவிறுப்பாக இருக்கும்னு சொல்லப்படுகிறது.