More
Categories: Cinema News latest news

குட் பேட் அக்லி திரைப்படத்தில் நயனை ஓவர்டேக் செய்த ஆதிக் ரவிசந்திரன்… சம்பளம் இவ்வளவா?

Good Bad Ugly: மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பட குழுவின் சம்பளம் குறித்த விவரங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தின் டிரைலர் முதலில் வரவேற்பு பெற்ற நிலையில் படமும் வெளியாகி மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட்டானது. விஷால் நடிப்பில் பல வருடம் கழித்து மார்க் ஆண்டனி வெற்றி படமானது.

இதையும் படிங்க: கன்பார்ம் ஆச்சுங்கோ… தனுஷின் கைவசம் வந்த மல்லுவுட் வெற்றி இயக்குனர்.. அப்டேட் என்ன தெரியுமா?

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. இந்த வெற்றி ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு குட் பேட் அக்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு அஜித் தன்னுடைய அக்மார்க் ஸ்டைலில் இருந்து இப்படத்தில் வேறுபட்டு நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ராமராஜனா கொக்கா!.. பக்காவான கதையில் பார்க்க வச்சுட்டாரே!.. சாமானியன் விமர்சனம் இதோ!..

தேவிஸ்ரீபிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இப்படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐந்தாவது முறையாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.  சமீபத்தில் படக்குழுவுடன் நயனும் இணைந்து இருக்கிறார்.

இப்படத்திற்கு அஜித் சம்பளமாக 163 கோடி ரூபாய் பெற்று இருக்கிறார். ஆதிக் ரவிசந்திரனுக்கு 15 கோடி சம்பளமாகவும் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். ஆனால் வெற்றி நாயகியாக இருந்து சரிவை சந்தித்து இருக்கும் நயன்தாராவுக்கு சம்பளமாக 10 கோடி மட்டுமே பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Published by
Akhilan

Recent Posts