good bad ugly: மொத்த வித்தையையும் இறக்கிட்டீயே மாமே… குட்பேட் அக்லி டிரெய்லர் சொன்ன கதை!

good bad ugly
நேற்று இரவு 9.01மணிக்கு குட் பேட் அக்லி டிரெய்லர் ரிலீஸ் ஆனது. ஆதிக் ரவிச்சந்திரன் மொத்த வித்தையையும் இறக்கிட்டாரே என்று சொல்லும் அளவு இருந்தது. இதுபற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பாருங்க.
அஜீத்தை எந்த வடிவத்தில் காட்டினாலும் நாங்க பார்க்குறோம். அவரு குரலே அவ்ளோ ஸ்வீட். ஆதிக் அஜீத்தை ரசித்து ரசித்து எடுத்த படம். இப்பதான் உங்க வரலாறை எடுத்துப் பார்த்தேன். நீங்க ரொம்ப வில்லனாமே.. அப்படின்னு வில்லன் சொல்ல அஜீத்தை மாஸாகக் காட்டுறாங்க.
யூத், சால்ட் அண்டு பெப்பர், வேட்டி உடுத்திட்டு கடாமீசை, தொப்பைன்னு எப்படி வந்தாலும் அஜீத்தை ரசிக்கிறாங்க. ஆடவே மாட்டேங்குறாரு. நின்னுக்கிட்டே குத்துறாருன்னு என்ன விமர்சனம் வந்தாலும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜீத்தை அசல் ஃபேன் பாயா தரை லோக்கலா இறங்கி மூணு கெட்டப்ல காட்டுறதுதான் வேற லெவல்.
அஜீத் வில்லத்தனமும் பண்ணிருக்காரு. காமெடியும் பண்ணிருக்காரு. ரஜினிக்கு எப்படி வில்லத்தனமோ அதே மாதிரி பிச்சி உதறிடுறாரு. எட்டுப்பட்டி ராசா படத்தில் வரும் ஒத்த ரூபா தாரேன் பாட்டுதான் டிரெய்லர்ல ஆரம்பிக்குது. 90ஸ்ல இது தெறிக்க விட்ட சாங். கை இருக்கும், கால் இருக்கும், மூக்கு இருக்கும், முழி இருக்கும். ஆனா உயிரு என்ற இந்த மாஸ் டயலாக் தீனாவுல வருது.
அர்ஜூன் தாஸ்தான் வில்லன். படத்துல அப்பா, மகன் சம்பந்தப்பட்ட ஒரு சென்டிமென்ட் இருக்கு. அதனால தான் என் பையனுக்கு ஒண்ணுன்னா அவ்ளோதான்னு அஜீத் டயலாக் பேசுறாரு. படத்துல என்ன கதைன்னா ஒரு பையன் இருக்காரு. அப்போ குட்டா வாழ்றாரு. அவரு பையன சீண்டுறாங்க. பேடா மாறிடுறாரு. பையனுக்கு இன்னும் தொந்தரவு கொடுக்குறாங்கன்னா அக்லியா மாறி உள்ளே வச்சி செய்றாரு. அதான் கதையா இருக்கும்னு தோணுது.
இதெல்லாம் மீறி பிரபு ஒரு பஞ்ச் கொடுக்குறாரு. அவன் பயத்துக்கே பயம் காட்டுவான்னு சொல்றாரு. அது அசல் படத்தை நினைவுபடுத்துகிறது. படம் முழுக்க பக்கா என்டர்டெயின்மெண்ட்தான். எந்தப் படத்துக்கும் புரொமோஷனுக்கு வர மாட்டேன்னு சொல்றதுக்கு ஒரு தில் வேணும். அது அஜீத்கிட்ட இருக்கு. சம்பளம் பேசுறதுக்கு முன்னாடியே இந்தப் படத்துக்கு புரொமோஷன்லாம் வரமாட்டேன். இஷ்டம் இருந்தா வாங்கன்னு சொல்வாராம் அஜீத். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.