குட் பேட் அக்லி படம் மலேசியாவில் அவ்ளோ வசூலா? பிரபலம் சொன்ன லேட்டஸ்ட் தகவல்!

by sankaran v |
goodbadugly ajith
X

goodbadugly ajith

goodbadugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு ஃபேன் பாய் படமாக அஜித் நடிப்பில் வெளியானது குட்பேட் அக்லி. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. படமும் 200 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரியா வாரியர், ரெடின்கிங்ஸ்லி, யோகிபாபு, அர்ஜூன்தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் 3 ரெட்ரோ சாங்ஸ் தெறிக்க விடுகிறது. படத்தில் இளையராஜாவின் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது. அதே நேரம் தயாரிப்பு தரப்பில் இருந்து யாரிடம் உரிமை உள்ளதோ அவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று விட்டோம் என இளையராஜாவுக்கு பதில் தெரிவித்துள்ளனர்.

அஜித் படத்தைப் பார்த்து விட்டு ஆதிக் ரவிச்சந்திரனைப் பாராட்டியுள்ளார். அடுத்த படத்திலும் அவருடைய இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல ஆதிக்கும் நான் எந்த ஒரு வெற்றிப்படமும் கொடுக்காமல் இருந்த நேரத்திலேயே அஜித் என்னுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். அந்த வகையில் அவர்தான் என்னோட ரியல் ஹீரோ என்று புகழ்ந்துள்ளார்.

படத்திற்கு வெளிநாடுகளில் எப்படி வரவேற்பு உள்ளது? குறிப்பாக மலேசியாவில் அதிக வசூலா என்ற கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் இப்படி பதில் அளித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் குட்பேட் அக்லி திரைப்படம் மலேசியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்திருக்கிறது உண்மையான தகவல்தான். அந்தப் படத்தை வாங்கி இருக்கும் விநியோகஸ்தருக்கு 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று விநியோகஸ்தர் ஒருவர் சொல்ல நான் கேட்டேன் என்கிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

Next Story