ஜாட் பட வசூலை சிதறடித்த குட்பேட் அக்லி… 3ம் நாளில் எவ்வளவுன்னு பாருங்க!

GBU, Jaat
goodbadugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. அஜித், திரிஷா, சிம்ரன், பிரியா வாரியர், பிரபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதே நேரம் இது ஃபேன் பாய் படம் என்பதால் நெகடிவ் விமர்சனங்களும் வரத்தொடங்கின.
படம் முழுக்க இயக்குனர் அஜீத்தை அட்டகாசமான லுக்கில் காட்டியுள்ளார். இயக்குனர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் ரசிகர்களுக்குப் பிடித்த அத்தனை அம்சங்களையும் கொண்டு வந்துள்ளார். இது ரசிகர்களைத்தான் கவருமே தவிர பொதுமக்களைக் கவருமா என்பது நாளை முதல் தான் தெரிய வரும். இப்போது படத்தின் 3 நாள் வசூல் விவரம் பார்க்கலாமா…
குட் பேட் அக்லி இந்திய அளவில் முதல் நாளில் வசூல் 29.25 கோடி. 2ம் நாளில் 15 கோடி. 3ம் நாளில் 18.50கோடி. ஆக மொத்தம் 62.75கோடி. அதே சமயம் குட் பேட் அக்லி ரெண்டரை நாளிலேயே 100 கோடியை வசூலித்துள்ளதாக ரமேஷ் பாலா என்ற அஜீத்தின் ஆதரவாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அஜித் படத்துடன் ஒரே நாளில் ரிலீஸ் ஆன பாலிவுட் படம் ஜாட். சன்னிதியோல் நடித்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. கதார் 2 படத்துக்குப் பிறகு பிக் ஓபனிங் என்கிறார்கள். இந்தப் படம் முதல் நாளில் 9.5கோடி, 2வது நாளில் 7 கோடி ஆக வசூலித்தது. 3வது நாளில் 10கோடி வரை வசூலிக்குமானால். மொத்தம் 25 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் அஜித் படத்தின் கலெக்ஷனை சன்னிதியோல் படம் நெருங்கக்கூட முடியவில்லை. அதே நேரம் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த லியோ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் 145 கோடி. இந்த வசூலை அஜீத்தின் மொத்த நாள் வசூலும் பெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனென்றால் முதல் 3 நாள் தான் ரசிகர்களின் வருகை இருக்கும்.
அதன்பிறகு பொதுமக்கள்தான் படத்துக்கு வரவேண்டும். அது நாளை திங்கள்கிழமை முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் தெரிய வரும் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். பொதுமக்களின் ஆதரவும் அதிகமாக இருந்தால் படம் நிச்சயம் மாபெரும் வசூலைச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.