2025ல டாப் ஓபனிங்… 5வது நாள் வரை பாக்ஸ் ஆபீஸ்ல மாஸ் காட்டும் குட் பேட் அக்லி!

GBU ajith
goodbadugly: அஜித், ஆதிக்கின் கூட்டணியில் அமைந்த முதல் படமே தெறி மாஸ். படா மாஸ்னு சொல்ற மாதிரி ஆகிடுச்சு. குட் பேட் அக்லிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. படத்தை ஒரு ஃபேன் பாய் மொமண்டாக எடுத்து கலக்கி விட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். ஜிவி.பிரகாஷின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. இப்போது படத்தின் பல்வேறு கட்ட வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம்.
சேக்நில்க் நிறுவன ரிப்போர்ட்டின் படி, குட் பேட் அக்லி முதல் நாளில் 29.25கோடி, 2வது நாளில் 15 கோடி, 3வது நாளில் 19.75 கோடி, 4வது நாளில் 22.3 கோடி, வது நாளில் 15 கோடி. ஆக மொத்தம் 101.30 கோடி.
பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டின் படி, உலகளவில் முதல் நாளில் 51.5கோடியும், 2வது நாளில் 27.5கோடியும், 3வது நாளில் 33.95கோடியும், 4வது நாளில் 36.85கோடியும் வசூலித்துள்ளது. ஆக மொத்தம் 171கோடியை வசூலித்துள்ளது. 5வது நாளில் 21கோடியை வசூலித்துள்ளது. மொத்தம் 192கோடி.
தமிழகத்தில் முதல் நாளில் 28.35கோடியும், 2வது நாளில் 27.5கோடியும், 3வது நாளில் 19.5கோடியும், 4வது நாளில் 22கோடியும் வசூலித்துள்ளது. ஆக மொத்தம் 86.4கோடியை வசூலித்துள்ளது. 5வது நாளில் 15கோடி வரை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் முதல் நாளில் 17கோடியை வசூலித்துள்ளது.
இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் ஓபனிங் வசூல் சாதனை படைத்த படம் என்றால் அது குட்பேட் அக்லி தான். 51.5கோடியை முதல் நாளில் வசூலித்துள்ளது. அடுத்த இடத்தையும் அஜித்தின் படம்தான் பிடித்துள்ளது. விடாமுயற்சி. இதன் முதல் நாள் வசூல் 48கோடி. அதற்கு அடுத்த இடத்தை டிராகன் படம் பிடித்துள்ளது. 11.2கோடியை வசூலித்துள்ளது.