Goodbadugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, பிரியா வாரியர், சிம்ரன், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் 10.4.2025ல் வெளியானது. படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். விடாமுயற்சி படத்தில் வழக்கமான அஜித்தைப் பார்க்க முடியாதவர்கள் இந்தப் படத்தில் கொண்டாடித் தீர்த்தார்கள். எந்த ஒரு படமானாலும் அது பொதுமக்களின் வருகையின்போது எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தே ரிசல்ட் உள்ளது. இந்தப் படம் எப்படின்னு பார்ப்போம்.
இது ஒரு ஃபேன் பாய் படம். ஆதிக்கே தீவிர அஜித் ரசிகர் என்பதால் படத்தையும் செதுக்கி இருக்கிறார். அஜித் வரும் காட்சி எல்லாம் அழகு. அவர் படத்தில் எந்த லுக்கில் இருந்தாலும் அஜித் அழகுதான். எந்தக் கெட்டப் எந்த உடை அணிந்தாலும் ஒரு ஸ்மார்ட் லுக். படம் முழுக்க அஜித்தின் அட்டகாசம்தான். பில்லா, தீனா, வரலாறு, வீரம் என்று பல படங்களின் ரெஃபரன்ஸ் படத்தில் வருகிறது. இது தவிர 3 ரெட்ரோ சாங் வருகிறது. ஒத்த ரூபா தாரேன், இளமை இதோ இதோ திரையரங்கைத் தெறிக்க விடுகிறது.

அஜீத்தின் குட்பேட் அக்லி ரிலீஸ் ஆவதற்கு முன் 1000 கோடி நிச்சயம் இந்தப் படம் தொட வாய்ப்பு இருக்குன்னு மீடியாக்களில் பலரும் சொன்னாங்க. ஆனா வழக்கம்போல இதுவும் பல்ப் வாங்கிடுச்சே என்றே எண்ணத் தோன்றுகிறது. வசூல் படிப்படியாக ரசிகர்களின் வருகையின்போது ஏறிக்கொண்டே இருந்தது. பொதுமக்களின் வருகையில் 6வது நாளான நேற்று படம் அப்படியே வசூலில் பாதியாகக் குறைந்து போனது.
அதன்படி இந்திய அளவில் முதல்நாளில் 29.25கோடி, 2வது நாளில் 15 கோடி, 3வது நாளில் 19.75 கோடி, 4வது நாளில் 22.3கோடி, 5வது நாளில் 15கோடி, 6வது நாளில் 6.50கோடி என மொத்தம் 107.80கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.