குட் பேட் அக்லிக்காக அஜித்தின் காலில் விழுந்த ஆதிக்… பிரபலம் சொன்ன ஆச்சரியம்!

by sankaran v |   ( Updated:2025-04-12 09:23:08  )
ajith, aathik
X

ajith, aathik

குட் பேட் அக்லி படம் கடந்த 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அஜித் அடிக்கடி நாக்கைத் துருத்தியபடி நடித்திருப்பார். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

திங்கள்கிழமை குட் பேட் அக்லி 100 கோடி கிராஸ் பண்ணும்னு சொல்றாங்க. ரசிகர்களுக்கான படமாக ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கி இருக்காரு. படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரீல்ஸ் மாதிரி ஆதிக் உருவாக்கி இருக்காரு. அதனாலதான் ஜெயிச்சிருக்காரு. அர்ஜூன்தாஸ் வளர்ந்து வரும் நடிகர். அவரை வில்லனாக நடிக்க அஜித் வாய்ப்பு கொடுத்தாரு.

அதே மாதிரி இதுக்கு முன்னால அருண்விஜய்க்கு வாய்ப்பைக் கொடுத்து அவரை வளர வச்சாரு. இன்னைக்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குற நடிகரா இருக்காரு. படத்துல அஜித் அடிக்கடி நாக்கைத் துருத்திக்கிட்டே வர்றாரு. ஏன்னு எல்லாம் விமர்சனம் வருது. டைரக்டர் படத்துல நாக்கைத் துருத்திக்கிட்டு நடிக்கணும்னு சொல்ல அஜித் கேட்கல. அப்புறம் டைரக்டர் அவரு கால்ல விழுந்துட்டாராம்.

goodbadugly அதுக்கு அப்புறம்தான் அவர் சொன்ன மாதிரி நாக்கைத் துருத்திக்கிட்டு நடிச்சாராம். அஜித் மேக்கப்பே போட மாட்டாரு. இந்தப் படத்துலயும் மேக்கப்பே போடல. ஆனா அஜித்தை கலர் கலரா ஆதிக் சட்டையைப் போட வச்சிருக்காரு. அஜித் இன்னைக்கு செல்வாக்குல எங்கேயோ இருக்காரு. ஆனா எந்தவித அலட்டலும் இல்லாமல் இருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன்தாஸ் வளர வேண்டிய ஆளுன்னு தன் படத்துல அஜித் நடிக்க வைச்சது அதுவும் மெயின் வில்லனா போட்டது அவரோட பெருந்தன்மை. அந்த விஷயத்துல அஜித்தைப் பாராட்டலாம். அப்படி பாராட்டினா விஜய்க்கு ஓட்டு வருமான்னு கேட்குறாங்க. விஜய்க்கு ஓட்டு போடுங்க. போடாமப் போங்க. அது உங்க தலை எழுத்து. விஜயோட தலை எழுத்து. நான் யாருக்கு ஓட்டுப் போடுவேன்கறதை நான் தேர்தல் நேரத்துல தான் தீர்மானிப்பேன் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

Next Story