Goodbadugly collection: குட்பேட் அக்லி படத்தின் 4வது நாள் வசூல்… இன்று இந்திய அளவில் சென்சுரி?

ajith 25
goodbadugly: குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். அஜீத்தின் மாஸான நடிப்பில் இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. பல கெட்டப்புகளில் வந்து ஸ்மார்ட் லுக் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார் அஜித்.
ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் ஃபேன் படமாகவே எடுத்துவிட்டார். இது அஜித் ரசிகர்களைக் கவர்ந்தாலும் பல்வேறு தரப்பினரிடையே கலவையான விமர்சனங்களையும், ஒரு சிலர் நெகடிவ் கமெண்டுகளையும் கொடுத்து வருகின்றனர்.
படத்தில் பெரிய அளவில் கதை ஒன்றும் இல்லை. பிளாஷ்பேக்கும் வலுவான கதை அம்சத்துடன் இல்லை. அஜித் ஒரு ரெட்ரோ டிராகன் என்ற பெயரில் கேங்ஸ்டராக மும்பையைக் கலக்கி வருகிறார். திரிஷாவுடன் காதல் திருமணம். குழந்தை பிறக்கிறது. அஜித்தால் தன் குழந்தைக்கு ஆபத்து வருமோ என பயந்து அவரை சிறைக்கு போய் திருந்தி வரச் சொல்கிறார் திரிஷா.
18 ஆண்டுகள் அங்கேயே கழித்த அஜித் திரும்பி வந்து மகனை சந்திக்கும்போது வில்லன்களால் மீண்டும் பூகம்பம் வெடிக்கிறது. மகன் மீது போதைக் கடத்தல் பழிவிழ அவன் சிறை செல்ல நேரிடுகிறது. இதன்பிறகு திரிஷா அஜித்தை நீ இன்னும் திருந்தலையா என கோபத்துடன் அவரைப் பிரிகிறாள். ஆனால் மகனைக் காப்பாற்ற அஜித் மீண்டும் கேங்ஸ்டராகிறார்.
அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. படத்தில் ரெட்ரோ சாங் 3 உள்ளது. ஒத்த ரூபா தாரேன் பாடலுக்கு வில்லன் அர்ஜூன்தாஸ் போடும் ஆட்டம் செம. இளமை இதோ இதோ பாடலுக்கு அஜித் போடும் பைட் வேற லெவல். அந்த வகையில் படம் முழுவதும் 2கே கிட்ஸ்களைக் கவரும் வகையில் ஜிவி.பிரகாஷின் இசையும் தெறிக்கவிடுகிறது. இப்போது படத்தின் 4 நாள் வசூல் விவரம் பார்ப்போம்.
குட்பேட் அக்லி இந்திய அளவில் செய்த முதல் நாள் வசூல் 29.25 கோடி. 2வது நாளில் 15 கோடியாகக் குறைந்தது. மீண்டும் 3வது நாளில் 19.75கோடியாக அதிகரித்தது. 4வது நாளில் 20.50கோடியாக மேலும் அதிகரித்துள்ளது. ஆக மொத்தம் 84.50 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இன்று தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்கும். இந்திய அளவில் இன்றே 100 கோடி வசூலை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.