இவ்ளோ நாளா குட்பேட் அக்லி செய்த வசூல்… படம் ஹிட்டாக இன்னும் எத்தனை கோடி தேவை?

goodbadugly
goodbadugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த சூப்பர்ஹிட் படம் குட்பேட் அக்லி. கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆதிக் அஜித்தின் தீவிர ரசிகர் என்றதால் படத்தை ஒரு ஃபேன் பாய் மொமண்டாகவே இயக்கியுள்ளார். திரிஷா, அர்ஜூன்தாஸ், ரெடின்கிங்ஸ்லி, பிரியாவாரியர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் முழுக்க முழுக்க அஜித் தான் அமர்க்களம் செய்கிறார்.
அவரை வித விதமான லுக்கில் காட்டி ஆதிக் அசத்தியுள்ளார். அர்ஜூன்தாஸ்சும் வில்லனாக அருமையாக நடித்துள்ளார். படத்தின் கதை தான் பெரிய அளவில் டச்சாகவில்லை. அதில் ஒரு அழுத்தம் இல்லை. ஜாலியா போய் ஜாலியா பார்த்துட்டு வரலாம். அவ்ளோதான்.
ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் பொதுமக்களைக் கவர்ந்ததா என்றால் இனி வரும் நாள்களில்தான் தெரிய வரும். படம் ஹிட்டடிக்க இன்னும் எத்தனை கோடியை வசூலிக்கணும்னு பார்க்கலாம்.
இந்திய அளவில் முதல் நாளில் 29.25கோடி, 2வது நாளில் 15கோடி, 3வது நாளில் 19.75கோடி, 4வது நாளில் 22.3கோடி, 5வது நாளில் 15 கோடி, 6வது நாளில் 7 கோடி, 7வது நாளில் 5.55கோடி, 8வது நாளில் 5.37கோடி வசூலித்துள்ளது. ஆக மொத்தம் 119.22கோடி வசூல் பார்த்துள்ளது.

உலகளவில் கடந்த 8 நாள்களாக 196.5கோடியை வசூலித்துள்ளது. தமிழக அளவில் 113.05கோடியை வசூலித்துள்ளது. குட்பேட் அக்லியின் தயாரிப்பு, புரொமோஷன் செலவு உள்பட மொத்த பட்ஜெட்டே 200கோடி. இப்போதுதான் படத்தின் வசூலே 200கோடியை நெருங்குகிறது. இனி ஓடுனா தான் லாபமா? அப்படின்னு சொல்ல முடியாது.
படத்தின் ஓடிடி, சேட்டிலைட் உரிமைகளிலும் கணிசமான லாபம் கிடைத்து இருக்கும். உலகம் முழுவதும் 8000 ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டது. இந்தப் படம் ஹிட்டா, பிளாப்பான்னு கேட்கிறாங்க. 220 கோடியை வசூலித்தால் அதுல 114கோடி விநியோகஸ்தர்களின் பங்காகப் போய்விடும்.
அப்படின்னா படம் ஹிட். படம் டாப் ஓபனிங்கில் இந்த ஆண்டு முதலிடத்தில் உள்ளது. இன்னும் சில நாள்களில் அந்த 220கோடியை எட்டிப்பிடித்து ஹிட் அடித்து விடும் என்றே தெரிகிறது. வெயிட் பண்ணிப் பார்க்கலாம்.