குட்பேட் அக்லியில இருக்குற மைனஸ் இந்த ஒண்ணுதான்..! அஜீத் எப்படி ஒத்துக்கிட்டாரு?

Published On: April 10, 2025
| Posted By : sankaran v
ajith gbu

good bad ugly review: குட் பேட் அக்லி எப்படி இருக்கு? படத்தோட பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிற சூழலில் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

ஆதிக் ரவிச்சந்திரனோட ஃபேன் பாய் படம். கதை ஒண்ணும் பெரிசு கிடையாது. படம் முழுக்க அஜீத் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படம். விடாமுயற்சியில் மகிழ்த்திருமேனி இது அஜீத் படம் கிடையாதுன்னு ஓப்பனா சொன்னாரு. ஆனா இதுல ஆதிக் ரவிச்சந்திரன் நான் தர லோக்கல் அஜீத் ரசிகரோட ஃபேன்னு சொல்லி எடுத்துருக்காரு. படமும் அப்படித்தான் இருக்கு.

ஆரம்பத்துல இருந்தே ஏகே பெரிய கேங்ஸ்டர். அது தெரிஞ்சும் திரிஷா கல்யாணம் பண்ணிக்கிறாரு. அப்போ குழந்தையும் பெத்துக்குறாரு. அப்பாவால பையனுக்கு எதுவும் ஆகிடுமோன்னு அஜீத்தை திரிஷா கிளம்பச் சொல்லி போலீஸில் சரணடையச் சொல்றாரு.

தன் மனைவி, குழந்தைக்காக போலீஸில் சரண்டர் ஆகி 18 வருஷம் ஜெயில்ல இருக்காரு. திரும்ப வரும்போதும் ஒரு அட்டாக் நடக்குது. திரும்பவும் திரிஷா நீ இன்னும் மாறலன்னு சொல்றாரு. அப்புறம்தான் உள்ளே இறங்கி அஜீத் என்ன நடக்குதுன்னு பார்க்கும்போது தன்னோட மகனுக்கு ஆபத்துன்னு தெரியவருது.

goodbaduglyஅப்போ தான் பேடா மாறிடுறாரு. அவ்ளோதான் கதை. இப்படி பழிவாங்குற கதை நிறைய வந்துருக்கு. இதுல வின்டேஜ் அஜீத். படம் முழுக்க அவரைக் கொண்டாடலாம். சிம்பு, தனுஷ் இறங்கி பண்ணக்கூடிய படம். அஜீத் எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தோணுது.

மார்க் அண்டனியோட இன்னொரு வெர்சனா கூட சொல்லலாம். ஒத்த ரூபா தாரேன், இளமை இதோ இதோ, சுத்தி சுத்தி வந்த சுல்தானா என ரெட்ரோ சாங்ஸ் கொண்டு வந்து தியேட்டரை அலற விட்டுருக்காங்க. திரிஷா, சிம்ரன், ரெடின்கிங்ஸ்லி, யோகிபாபு, அர்ஜூன்தாஸ் எல்லாருமே சூப்பர். இதுல ரகுவரனின் இடத்தை ரீப்ளேஸ் பண்ணற திறமை அர்ஜூன்தாஸ்சுக்கு இருக்கு.

அந்தளவுக்கு அஜீத்துக்கு வில்லனா பிரமாதமா நடிச்சிருக்காரு. வாலி, தீனான்னு ரெஃபரென்ஸ அழகா வச்சிருக்காங்க. குட் பேட் அப்புறம் அக்லியா எப்படி மாறுறாரு? அப்படி மாற வச்சது யாருன்னு அழகா கொடுத்துருக்காரு ஆதிக். ஜிவி.பிரகாஷ் மியூசிக்ல கலக்கிட்டாரு. படத்துல முதல் பாதியில பல இடங்கள்ல லேக் இருக்கு. அழுத்தமான கதை இல்ல. செகண்ட் ஆஃப் சூடுபிடிக்குது. அஜீத்தை சைலண்டா காமெடி பண்ணிருக்காரு. எல்லா கேரக்டருக்கும் அதுக்கான ஸ்பேஸ் கொடுத்துருக்காரு அஜீத். ஆதிக் வச்ச அந்த லாஜிக்கான விஷயம் சூப்பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.