Categories: Gossips

நான் இப்போ வேற லெவல்.! தமிழுக்கு நோ.! அலும்பு பண்ணும் சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் உள்ள இளம் நட்சத்திரம் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் வசூலை அவரே  முறியடித்து வருகிறார். டாக்டர், டான் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களையே பதற வைத்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அதேபோல இவரது கதை தேர்வும் இயக்குனர் தேர்வும் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. இவர் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அது அவரது 20வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.

அதற்கு அடுத்ததாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்க தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் சாய்பல்லவி ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

அந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக மண்டேலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்  மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதையும் படியுங்களேன் – போனி மாம்ஸ் என்னய்யா பண்ற.? அஜித் ரசிகர்களை புலம்ப வைத்த கார்த்தி, சிம்பு.?!

தெலுங்கு முன்னணி நடிகை சாய் பல்லவியை கமிட் செய்து தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்த சிவகார்த்திகேயன் முயற்சி செய்கிறார் என்றும், அதேபோல, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அவர்களை கமிட் செய்து பாலிவுட்டிலும் தனது முகத்தை பதியவைக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

எது எப்படியோ டாக்டர், டான் திரைப்படங்களை போன்று கதைகளத்திற்கு என்ன தேவையோ அதனை கச்சிதமாக செய்து முடித்தால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் அடுத்த லெவலுக்கு சென்றுவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

Manikandan
Published by
Manikandan