Connect with us

Gossips

நான் டீ கடை வைச்சி பொழைச்சிப்பேன்.! ரெட் கார்டு பஞ்சாயத்தை அலறவிட்ட எஸ்.ஜே.சூர்யா.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி,  அஜித், விஜய், தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ் பாபு என பெரிய பெரிய நடிகர்களை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்து, அடுத்து தனக்கு பிடித்தமான நடிப்பு துறையை தேர்ந்தெடுத்து நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா

நடிப்பு துறையிலும், தான் பெரிய ஜாம்பவான் என படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார். இசை, இறைவி, மெர்சல், ஸ்பைடர், மான்ஸ்டர், மாநாடு என மிரட்டலான நடிப்பை கொடுத்து உச்சம் தொட்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

இப்படி, இருந்த மனுஷனுக்கு ரெட் கார்டு கொடுக்க ஒரு குழு முடிவெடுத்ததாம். ஆம், இவர் இயக்குனராக இருந்த சமயத்தில் ஒரு படத்தை இயக்கி தருவதாக கூறி 1 கோடி அட்வான்ஸ் வாங்கினாராம். அது பிறகு முடியாமல், பணத்தை திருப்பி தருகிறேன் என சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் கூறினாராம்,

இதையும் படியுங்களேன் – அவர் சகவாசமே வேணாம் ஆள விடுங்க!…கும்பிடு போட்டு தெறித்து ஓடிய சூரி…!

ஆனால், அவர் வாங்க மறுத்து, வேண்டாம் பின்னாளில் ஏதேனும் படம் இயக்கி கொடுங்கள் என கூறினாராம். இது வருடங்கள் ஓடிவிட்டன. திடீரென தற்போது வந்து, அந்த ஒரு கோடிக்கு, இந்தனை வருட வட்டி போட்டு 4 கோடி ஆகிவிட்டது அதனை செட்டில் செய்யுங்கள் என கூறியதும், எஸ்.ஜே.சூர்யா டென்ஷனாகி விட்டாராம்.

மேலும், உங்களுக்கு ரெட் கார்டு வாங்கி கொடுத்து நடிக்க முடியாமல் செய்துவிடுவோம் என கூறியதும், நடிக்கலைனா நான் டீ கடை வச்சி பொழைச்சிப்பேன். உங்களுக்கு அந்த 1 கோடிக்கு மேல் 1 ரூபாய் கூட தரமாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம் எஸ்.ஜே.சூர்யா.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top