Connect with us
sivaji

Cinema History

தேவர் மகன் பார்த்துவிட்டு கவுண்டமணி அடித்த கமெண்ட்!.. அதிர்ந்து போன சிவாஜி…

கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் தேவர்மகன். இப்படத்தில் கமலின் அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். தேவர் சமுதாயத்தை சேர்ந்த கமல் குடும்ப பகையால் ஊர் பிரச்சனையில் சிக்கிவிடக்கூடாது என யோசித்து அப்பாவின் மறைவுக்கு பின் அந்த ஊரை சுமூகமாக வழிநடத்தி செல்ல முயல்வார். ஆனால், பரம்பரை எதிரி நாசர் அதற்கு கட்டையை போட இறுதியில் அவரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வார். இப்படத்தில் சிவாஜிக்கும் கமலுக்கும் இடையேயான காட்சிகளை கமல் சிறப்பாக உருவாக்கியிருந்தார்.

பல வருடங்கள் கழிந்த பின்பும் கூட இப்படம் பற்றி இப்போதும் சினிமா விமர்சகர்கள் சிலாகித்து பேசுகிறார்கள். மாமன்னன் பட விழாவில் இப்படம் பற்றி மாரிசெல்வராஜ் பேசியதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மாரிசெல்வராஜை கமல் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கமல்

இது ஒருபுறம் எனில், தேவர் மகன் வெளியான போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக சிவாஜி ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால் அதோடு சரி. அந்த படத்தை பற்றி மற்றவர்களிடம் கருத்தெல்லாம் கேட்கமாட்டார்அதேபோல், ஒருபடம் உருவானால் திரையுலகை சேர்ந்த பலருக்கும் படத்தை சம்பந்தப்பட்ட நடிகரோ, இயக்குனரோ படங்களை திரையிட்டு காட்டுவார்கள். ஆனால், சிவாஜி அதை எப்போதும் செய்தது இல்லை.

ஆனால், தேவர் மகன் படமும், அதில் வந்த காட்சிகளும் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே, தனக்கு தெரிந்த பலருக்கும் இப்படத்தை காண அழைப்பு விடுத்தார். எல்லோருக்கும் ஒரு காட்சி ஏற்பாடு செய்து பார்க்க வைத்தார். அதில், நடிகர் கவுண்டமணியும் ஒருவர். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த எல்லோரும் சிவாஜியை பாராட்டி புகழந்தனர். அவரின் காலில் விழுந்தும் பலர் ஆசிர்வாதம் வாங்கினார்கள். ஆனால், கவுண்டமணியோ சிவாஜியை சந்திப்பதை தவிர்த்துவிட்டு பின்புறம் வழியாக வீட்டுக்கு போய்விட்டாராம்.

Goundamani

Goundamani

 

கவுண்டமணி எங்கே போனார்? அவர் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை?.. அவரை என் வீட்டிற்கு வரசொல்.. என சிவாஜி சொல்ல கவுண்டமணிக்கு தொலைப்பேசி அழைப்பு சென்றது. ஆனால், ‘நான் அவரை பார்த்து என்ன ஆகப்போகிறது?. வரவில்லை’ என கவுண்டமனி தயங்க, சிவாஜி தரப்பு விடாமல் அவரிடம் பேசி சிவாஜியின் முன் அவரை நிறுத்திவிட்டார்கள்.

thevar

‘என்னய்யா படம் பார்த்துட்டு அப்படியே போயிட்டே. எங்கிட்ட எதுவும் சொல்லலயே’ என சிவாஜி கேட்க, கவுண்டமணியோ. ‘நான் சொல்லுவேன். ஆனா நீங்க வருத்தப்படக்கூடாது’ என பீடிகை போட, சிவாஜியோ ‘அது என்னன்னாலும் சரி. சொல்லு’ என அவரின் சிம்மகுரலில் அதட்ட கவுண்டமணி ‘படத்துல நீங்க நடந்தா ஊரு நடக்கும், நீங்க படுத்தா ஊரு படுத்துக்கும் என பில்டப் பண்றாங்க.. ஆனா கடைசியில ஒரு சின்ன பொண்ணு உங்க நெஞ்சில மிதிச்சி நீங்க செத்து போயிடுறீங்க.. இதெல்லாம் ஒரு படமா?’ என நக்கலாக பேசி சிரித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாராம்.

இதைக்கேட்டு சிவாஜியே அதிர்ந்துபோனாராம். ‘சரி இவன் இந்த படத்தை இந்தக் கோணத்துல பாத்துருக்கான்’ என அங்கிருந்தவர்களிடம் சொன்னாராம் சிவாஜி.

கவுண்டமணியை தவிர வேறு யாரும் அப்படத்தை இப்படி யோசித்திருக்க மாட்டார்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top